TNPSC GROUP 1, 2/2A, 4, EO4 & TNEB, RRB, SI/PC
திருக்குறள்
மு.வரதராசனார் உரையும்
மின்னல் வேக கணிதம்
- கோச்சிங் சென்டர் போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் என்னுடைய BROTHER, SISTERகாக மட்டும்
q1
விடை = 7th (1) Page Number 48
கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும் உடையான்ஆம் வேந்தர்க்கு ஒளி. (இறைமாட்சி 390)
விளக்கம்: கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிகளைக் காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.

விடை =நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. (நட்பு 783)
விளக்கம்: பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

விடை = அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர். (பண்புடைமை 997)
விளக்கம்: மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், அரம்போல் கூர்மையான அறிவு உடையவராயினும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.

விடை =தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின். (வான் சிறப்பு. 19)
விளக்கம்: மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும்.

விடை =இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். (இடுக்கணழியாமை 623)
விளக்கம்: துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர்.

விடை =வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். (கூடாவொழுக்கம் 271)
விளக்கம்: வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.

விடை =
விளக்கம்:
விளக்கம்:
விடை = உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். (ஒழுக்கமுடைமை 140)
விளக்கம்: உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

விடை = தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு. (இறைமாட்சி 383)
விளக்கம்: காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை ஆகிய இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

0 Comments:
கருத்துரையிடுக