TNPSC GROUP 2/2A, 4 (VAO)
எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
5. விகிதத்தை பயன்படுத்தி தீர்வு காணுதல்
A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும் B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் முடிப்பார் . இருவரும் சேர்ந்து வேலை செய்து அவ்வேலையை முடித்து ரூ 600 ஐ தங்கள் வருவாயாகப் பெற்றனர் எனில் A மற்றும் B இன் பங்கு என்ன? (2018 G2)
a. 240,360
b. 300,300
c. 360,240
d. 400,200
A ஒரு வேலையை 10 நாட்களிலும் B அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பார் இருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்து ரூ. 1500 ஈட்டினார் அத்தொகையை எவ்வாறு பிரித்துக் கொள்வார்? (09/01/2019, 14/07/2018)
a. 600, 900
b. 700, 800
c. 800, 700
d. 900, 600
A என்பவர் ஒரு வேலையை 6 நாட்களிலும் B என்பவர் அதே வேலையை 8 நாட்களிலும் முடிப்பார் . இருவரும் சேர்ந்து வேலை செய்து அவ்வேலையை முடித்து ரூ 700 ஐ தங்கள் வருவாயாகப் பெற்றனர் எனில் A மற்றும் B இன் பங்கு என்ன?
a. 400, 300
b. 300, 400
c. 500, 200
d. 200, 500
x ஒரு வேலையை 18 நாட்களிலும் y அதை 24 நாட்களிலும் செய்து முடிப்பார் இருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்து ரூ. 42000 ஈட்டினால் y இன் பங்கு என்ன? (15/04/2017)
a. 24000
b. 18000
c. 20000
d. 22000
A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாள்களிலும் B ஆனவர் தனியே 15 நாள்களிலும் முடிப்பர். அவர்கள் இந்த வேலையை ₹200000 தொகைக்கு ஒப்புக் கொண்டனர் எனில், A பெறும் தொகை ________ ஆகும். (8th New Book)
a. ₹1,10,000
b. ₹1,20,000
c. ₹1,30,000
d. ₹1,40,000
a, b மற்றும் c ஆகியோர் ஒரு வேலையை முறையே 3, 6 மற்றும் 8 நாள்களில் முடிப்பர். a, b மற்றும் c ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ரூ.1500 வழங்கப்படும் எனில், அவர்கள் தனித்தனியேப் பெறும் பங்குகளைக் காண்க.
a. 800, 400, 300
b. 400, 800, 300
c. 300, 400, 800
d. 800, 300, 400
எடுத்துக்காட்டு 4.26
X, Y மற்றும் Z ஆகியோர் ஒரு வேலையை முறையே 4, 6 மற்றும் 10 நாள்களில் முடிப்பர். X, Y மற்றும் Z ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ரூ. 31000 வழங்கப்படும் எனில், அவர்கள் தனித்தனியேப் பெறும் பங்குகளைக் காண்க.
X, Y மற்றும் Z ஆகியோர் ஒரு வேலையை முறையே 4, 6 மற்றும் 10 நாள்களில் முடிப்பர். X, Y மற்றும் Z ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ரூ. 31000 வழங்கப்படும் எனில், அவர்கள் தனித்தனியேப் பெறும் பங்குகளைக் காண்க.
a. 15000, 10000, 6000
b. 15000, 6000, 10000
c. 6000, 10000, 15000
d. 10000, 15000, 6000
0 Comments:
கருத்துரையிடுக