TNPSC GROUP 2/2A, 4 (VAO)
எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
1. இருசக்கர வாகனம் ஒன்றின் விலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.60,000 ஆக இருந்தது அதன் மதிப்பு ஆண்டுதோறும் 5% குறைகிறது தற்போது அதன் தற்போது மதிப்பு காண்க.
a. 54000
b. 54050
c. 54500
d. 54150
2. மிதிவண்டி ஒன்று ஒரு கடைக்காரர் ரூ.4275 க்கு விற்பதால் அவருக்கு 5% நட்டம் ஏற்படுகிறது எனில் 5% லாபம் பெற வேண்டுமெனில் அவர் மிதிவண்டியை என்ன விலைக்கு விற்க வேண்டும்?
a. 4625
b. 4725
c. 4825
d. 4925
3. ஒரு எண்ணை 20% குறைத்தால் 80 கிடைக்கிறது எனில் அந்த எண்ணை காண்க?
a. 40
b. 60
c. 100
d. 120
4. A மற்றும் B இருவரும் ஒரு தொழில் தொடங்க 3:2 என்ற விகிதத்தில் முதலீடு செய்துள்ளனர். மொத்த லாபத்தில் 5% தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது, மற்றும் Aன் பங்கு ரூ. 855 எனில் மொத்த லாபம் என்ன?
a. 1425
b. 1576
c. 1500
d. 1537.50
5. x/5 = y/8 எனில் (x+5):(y+8)க்கு சமமானது
a. 3:5
b. 13:8
c. 8:5
d. 5:8
6. 180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?
a. 13
b. 14
c. 15
d. 16
7. இரு எண்களின் விகிதம் 5:7 அவவெண்களின் கூடுதல் 108 எனில் அவ்விரு எண்களின் பெரிய எண்?
a. 63
b. 49
c. 35
d. 42
8. 40 முதல் 100 வரை உள்ள எண்களில் எத்தனை எண் ஜோடிகளில் மீ.பெ.வ (HCF) 15 ஆக இருக்கும்?
a. 3
b. 4
c. 5
d. 6
9. இரு எண்களின் மீ.பெ.வ (HCF) 2 மற்றும் அவற்றின் மீ.சி.ம (LCM) 154 அவ்விரு எண்களுக்கு இடையே உள்ள வேறுபாடு 8 எனில் அவற்றின் கூடுதல்
a. 26
b. 36
c. 46
d. 56
10. 120 ஐ மீ.சி.ம -ஆக கொண்ட இரு எண்களுக்கு பின்வரும் எந்த எண்ணானது அவற்றின் மீ.பெ.வ -ஆக இருக்க இயலாது
a. 60
b. 40
c. 80
d. 30
0 Comments:
கருத்துரையிடுக