Day 1 Time & Work

TNPSC GROUP 1, 2/2A, 4, EO4 & TNEB, TET, RRB, SI/PC


மின்னல் வேக கணிதம்
  • கோச்சிங் சென்டர் போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் என்னுடைய BROTHER, SISTERகாக மட்டும்


தினம் தினம் Maths

  1. 1. ஒரு வெள்ள நிவாரண முகாமில் 80 நபர்களுக்குத் தேவையான உணவு 60 நாள்களுக்குப் போதுமானதாக உள்ளது. 10 நாள்களுக்குப் பின்னர், 20 நபர்கள் அந்த முகாமில் வந்து சேர்ந்தார்கள் எனில், அவ்வுணவு எத்தனை நாள்களுக்குப் போதுமானதாக இருக்கும்? (7th (1) New Book 84)
    1. a. 10 நாள்கள்
    2. b. 6 நாள்கள்
    3. c. 15 நாள்கள்
    4. d. 5 நாள்கள்

  2. 2. ஒரு வெள்ள நிவாரண முகாமில் 250 மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் பொருட்கள் 20 நாட்களுக்கு வரும் 12 நாட்களுக்குப் பிறகு 150 மக்கள் அந்த முகாமை விட்டு சென்று விடுகின்றார்கள் எனில் மீதம் உள்ள உணவுப் பொருட்கள் எத்தனை நாட்களுக்கு வரும்?
    1. a. 20
    2. b. 25
    3. c. 30
    4. d. 35

  3. 3. 120 பேர் 200 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வைத்துள்ளனர். 5 நாட்களுக்கு பிறகு 30 பேர் நோயால் இறந்து விடுகிறார்கள் எனில் மீதம் உள்ள உணவுப் பொருட்கள் எத்தனை நாட்களுக்கு இருக்கும்? (12/01/2019)
    1. a. 150
    2. b. 146 1/4
    3. c. 245
    4. d. 260

  4. 4. 120 பேர் 200 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வைத்துள்ளனர். 5 நாட்களுக்கு பிறகு 30 பேர் புதிதாக அவர்களுடன் சேர்ந்து கொண்டால் மீதி உணவுப்பொருட்கள் எத்தனை நாட்களுக்கு வரும்
    1. a. 260
    2. b. 156
    3. c. 150
    4. d. 245

  5. 5. ஒரு கோட்டையில் வேலை பார்க்கும் 300 மனிதர்களுக்கு 90 நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளது. 20 நாட்களுக்குப் பிறகு 50 பேர் சென்று விட்டனர் மீதம் உள்ள உணவுப் பொருட்கள் எத்தனை நாட்களுக்கு வரும்? (19/02/2017 G1)
    1. a. 160
    2. b. 210
    3. c. 84
    4. d. 80

  6. 6. 276 வீரர்கள் உள்ள ஒரு பட்டாளத்தில் 20 நாட்களுக்குத் தேவையான சமையல் பொருள்கள் உள்ளது அந்தப் பொருள்கள் 46 நாள்களுக்கு நீடிக்க வேண்டுமெனில் எத்தனை வீரர்கள் இந்தப்பட்டாளத்தை விட்டுச் செல்ல வேண்டும் (2019 G1)
    1. a. 136
    2. b. 156
    3. c. 146
    4. d. 164

  7. 7. ஒரு ராணுவ முகாமில் 800 வீரர்களுக்கு, 60 நாட்களுக்கு போதுமான உணவு உள்ளது. மேலும் புதிதாக 400 வீரர்கள் வந்து சேர்ந்தால் உணவு எத்தனை நாட்களுக்கு போதுமானது
    1. a. 40 நாட்கள்.
    2. b. 30 நாட்கள்
    3. c. 45 நாட்கள்
    4. d. 35 நாட்கள்

  8. 8. 3000 பேர் அடங்கிய ஒரு காவலர் படையில் 30 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் இருந்தது. 10 நாட்களுக்குப் பிறகு 1000 பேர் புதிதாக வந்து சேர்ந்தால், இருப்பதில் உள்ள பொருட்களில் எத்தனை நாட்களுக்கு போதுமானது? Postal Asst 2014
    1. a. 10
    2. b. 15
    3. c. 20
    4. d. 11




0 Comments:

கருத்துரையிடுக

-->