TNPSC TIME & WORK (காலம் மற்றும் வேலை) 8th New Book (45 கணக்குகள்)

TNPSC GROUP 1, 2/2A, 4, EO4 & TNEB, RRB, SI/PC
Minnal Vega Kanitham
TNPSC TIME & WORK New Book

1.  A மற்றும் B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C அதே வேலையை 15 நாட்களில் முடிப்பர். C மற்றும் A அதே வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் A, B மற்றும் C மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க தேவைப்படும் நாட்கள். (26/02/2020) (2014 G1) (2018 PC)
a. 10 நாட்கள்
b. 12 நாட்கள்
c. 14 நாட்கள்
d. 15 நாட்கள்
2.  A மற்றும் B இருவரும் ஒரு வேலையை 8 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C அதே வேலையை 12 நாட்களில் முடிப்பர். C மற்றும் A அதே வேலையை 24 நாட்களில் முடிப்பர் எனில் A, B மற்றும் C மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க தேவைப்படும் நாட்கள். (2014 DEO)
a. 4 நாட்கள்
b. 6 நாட்கள்
c. 7 நாட்கள்
d. 8 நாட்கள்
3.  ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்கள் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடத்தில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விட்டால் அத்தொட்டி நிரம்ப தேவைப்படும் நேரம் (2019 TNPSC)
a. 45 நிமிடங்கள்
b. 50 நிமிடங்கள்
c. 60 நிமிடங்கள்
d. 70 நிமிடங்கள்
4.  A, B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். B, C அதே வேலையை 15 நாட்களில் செய்து முடிப்பர். C, A அதே வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். மூவரும் சேர்ந்து மற்றும் தனித்தனியாகவும் அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்? (8th New Book)
a. சேர்ந்து = 10 நாட்கள் தனித்தனியாக A = 30, B = 20, C = 60
b. சேர்ந்து = 15 நாட்கள் தனித்தனியாக A = 35, B = 25, C = 65
c. சேர்ந்து = 20 நாட்கள் தனித்தனியாக A = 40, B = 30, C = 70
d. சேர்ந்து = 25 நாட்கள் தனித்தனியாக A = 45, B = 35, C = 75
5.  A என்பவர் ஒரு வேலையை 3 நாள்களிலும் B என்பவர் 6 நாள்களிலும் முடிப்பர் எனில், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை __________ நாள்களில் முடிப்பர். (8th New Book)
a. 1
b. 2
c. 3
d. 4
6.  A என்பவர் ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார். A மற்றும் B ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு வேலையை 6 நாள்களில் முடிப்பர் எனில், B என்பவர் தனியே அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (8th New Book)
a. 5
b. 6
c. 7
d. 8
7.  Aயும் Bம் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். A மட்டும் அந்த வேலையை 12 நாட்களில் செய்து முடித்தால், B மட்டும் அந்த வேலையை முடிக்க தேவைப்படும் நாட்களை காண்க? (2010 PC, 2009 PC)
a. 8 நாட்கள்
b. 9 நாட்கள்
c. 5 நாட்கள்
d. 6 நாட்கள்
8.  A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும் B என்பவர் அதேவேளை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? (2019 G4)
a. 12 நாட்கள்
b. 14 நாட்கள்
c. 10 நாட்கள்
d. 18 நாட்கள்
9.  ஒரு வேலையை A, B, C மூவரும் சேர்ந்து 4 நாட்களில் செய்து முடிப்பார். அந்த வேலையை A 12 நாட்களிலும், B 18 நாட்களிலும் செய்து முடிப்பார்கள் எனில், C மட்டும் அந்த வேலையை செய்து முடிக்க ஆகும் நாட்கள் (2007, 2013 G2)
a. 21
b. 16
c. 14
d. 9
1.  TIME & WORK (விகிதங்கள்)
A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும் B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் முடிப்பார் . இருவரும் சேர்ந்து வேலை செய்து அவ்வேலையை முடித்து ரூ 600 ஐ தங்கள் வருவாயாகப் பெற்றனர் எனில் A மற்றும் B இன் பங்கு என்ன? (2018 G2)
a. 240,360
b. 300,300
c. 360,240
d. 400,200
2.  A ஒரு வேலையை 10 நாட்களிலும் B அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பார் இருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்து ரூ. 1500 ஈட்டினார் அத்தொகையை எவ்வாறு பிரித்துக் கொள்வார்? (09/01/2019, 14/07/2018)
a. 600, 900
b. 700, 800
c. 800, 700
d. 900, 600
3.  A என்பவர் ஒரு வேலையை 6 நாட்களிலும் B என்பவர் அதே வேலையை 8 நாட்களிலும் முடிப்பார் . இருவரும் சேர்ந்து வேலை செய்து அவ்வேலையை முடித்து ரூ 700 ஐ தங்கள் வருவாயாகப் பெற்றனர் எனில் A மற்றும் B இன் பங்கு என்ன?
a. 400, 300
b. 300, 400
c. 500, 200
d. 200, 500
4.  x ஒரு வேலையை 18 நாட்களிலும் y அதை 24 நாட்களிலும் செய்து முடிப்பார் இருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்து ரூ. 42000 ஈட்டினால் y இன் பங்கு என்ன? (15/04/2017)
a. 24000
b. 18000
c. 20000
d. 22000
5.  A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாள்களிலும் B ஆனவர் தனியே 15 நாள்களிலும் முடிப்பர். அவர்கள் இந்த வேலையை ₹200000 தொகைக்கு ஒப்புக் கொண்டனர் எனில், A பெறும் தொகை ________ ஆகும். (8th New Book)
a. ₹1,10,000
b. ₹1,20,000
c. ₹1,30,000
d. ₹1,40,000
6.  a, b மற்றும் c ஆகியோர் ஒரு வேலையை முறையே 3, 6 மற்றும் 8 நாள்களில் முடிப்பர். a, b மற்றும் c ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ரூ.1500 வழங்கப்படும் எனில், அவர்கள் தனித்தனியேப் பெறும் பங்குகளைக் காண்க.
a. 800, 400, 300
b. 400, 800, 300
c. 300, 400, 800
d. 800, 300, 400
7.  எடுத்துக்காட்டு 4.26
X, Y மற்றும் Z ஆகியோர் ஒரு வேலையை முறையே 4, 6 மற்றும் 10 நாள்களில் முடிப்பர். X, Y மற்றும் Z ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ரூ. 31000 வழங்கப்படும் எனில், அவர்கள் தனித்தனியேப் பெறும் பங்குகளைக் காண்க. (8th New Book)
a. 15000, 10000, 6000
b. 15000, 6000, 10000
c. 6000, 10000, 15000
d. 10000, 15000, 6000
8.  12 மனிதர்களும் 16 மாணவர்களும் சேர்ந்து ஒரு வேலையை 5 நாட்களில் முடிக்கின்றனர். 13 மனிதர்களும், 24 மாணவர்களும் சேர்ந்து அவ்வேலையை 4 நாட்களில் முடித்தால், தினமும் மனிதனும் மாணவரும் செய்யும் வேலையின் விகிதத்தை கூறு. (05/09/2019)
a. 2:1
b. 3:1
c. 3:2
d. 5:4
9.  ஒரு வேலையை 20 பெண்கள் 16 நாட்களிலும் 16 ஆண்கள் 15 நாட்களிலும் முடிக்கிறார்கள். ஆண் மற்றும் பெண்ணின் வேலைத்திறன் விகிதமானது (11/06/2017)
a. 3:4
b. 4:3
c. 5:3
d. 2:1
1.  TIME & WORK (சதவிகிதம்)
A என்பவர் தனியே ஒரு வேலையை 35 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 40% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (8th New Book)
a. 23
b. 24
c. 25
d. 26
2.  ராம் என்பவர் ஒரு வேலையை 15 நாட்களில் முடிப்பார் ரஹீம் என்பவர் ராம்-ஐ விட 50% விரைவாக முடிப்பார் எனில் ரஹீம் மட்டும் தனியாக அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார் (2018)
a. 7 1/2
b. 10
c. 12
d. 14
3.  A என்பவர் தனியே ஒரு வேலையை 16 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 60% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (20/05/2017)
a. 8
b. 10
c. 8 1/2
d. 7 1/2
4.  A என்பவர் தனியே ஒரு வேலையை 12 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 60% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (20/08/2017) (26/12/2018)
a. 8
b. 7
c. 8 1/2
d. 7 1/2
5.  A என்பவர் தனியே ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 60% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (2015)
a. 15.
b. 10
c. 8 1/2
d. 7 1/2
6.  x மற்றும் y என்ற இரு தையல்காரர்கள் சேர்ந்து வாரத்தில் ரூபாய் 550 சம்பளமாக பெறுகின்றனர். yன் சம்பளத்தில் 120% ஐ x சம்பளமாக பெறுகிறார் எனில் y-ன் ஒரு வார சம்பளம் எவ்வளவு (31/12/2018)
a. 200
b. 250
c. 300
d. 350
1.  TIME & WORK (மடங்கு)
A, Bயை போல இருமடங்கு திறமையான நல்ல வேலைக்காரர். அவர்கள் இருவரும் ஒரு வேலையை 18 நாட்களில் முடிக்கிறார்கள் A மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்கள் முடிப்பார் (TNPSC 2017)
a. 26
b. 25
c. 27
d. 24
2.  A, Bயை போல இருமடங்கு திறமையான நல்ல வேலைக்காரர். அவர்கள் இருவரும் ஒரு வேலையை 8 நாட்களில் முடிக்கிறார்கள் B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்கள் முடிப்பார்
a. 12
b. 25
c. 27
d. 24
3.  A மற்றும் B ஆகியோர்கள் சேர்ந்து ஒரு வேலையை 7 நாட்கள் முடிக்கிறார்கள். A, B விட 1 3/4 மடங்கு விரைவாக முடிப்பார் எனில் அதே வேலையை A தனியாக எத்தனை நாட்களில் முடிப்பார் (TNPSC 2018)
a. 9 1/3
b. 11
c. 12 1/4
d. 16 1/3
4.  A மற்றும் B ஆகியோர்கள் சேர்ந்து ஒரு வேலையை 5 நாட்கள் முடிக்கிறார்கள். A, B விட 1 1/4 மடங்கு விரைவாக முடிப்பார் எனில் அதே வேலையை A தனியாக எத்தனை நாட்களில் முடிப்பார்
a. 9 1/5
b. 7 1/5
c. 9
d . 11
5.  A, Bஐ விட இரண்டு மடங்கு வேகமாக வேலை செய்பவர். B ஆல் ஒரு வேலையை தனியாக முடிக்க 12 நாட்கள் ஆகும். எனில் A மற்றும் B இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க தேவையான நாட்களை காண்க (25/07/2017)
a. 4
b. 6
c. 8
d. 18
6.  எடுத்துக்காட்டு 4. 25
A ஆனவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் 3 மடங்கு வேகமானவர். அவரால் அந்தப் வேலையை, B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாள்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தை காண்க. (8th New Book)
a. 6 நாள்கள்
b. 7 நாள்கள்
c. 8 நாள்கள்
d. 9 நாள்கள்
7.  A என்பவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் மூன்று மடங்கு வேகமானவர். B ஆனவர் ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார் எனில், இருவரும் இணைந்து அந்த வேலையை முடிக்க எத்தனை நாள்கள் எடுத்துக் கொள்வர் எனக் காண்க. (8th New Book)
a. 6 நாள்கள்
b. 7 நாள்கள்
c. 8 நாள்கள்
d. 9 நாள்கள்
1.  விலகிச் (left) செல்வது
A, B இருவரும் ஒரு வேலையை முறையே 12 நாட்கள், 18 நாட்களில் முடிப்பார்கள் 4 நாள் வேலை பார்த்த பிறகு A நீங்கி விடுகிறார். மீதி வேலையை B மட்டும் முடிக்கிறார் எனில் அவ்வேலையை முழுவதும் முடிக்க ஆகும் நாட்கள் (19/02/2017)
a. 30
b. 20
c. 12
d. 8
2.  A மற்றும் B இருவரும் ஒரு வேலையை செய்கிறார்கள். A 12 நாட்களில் வேலையை முடிக்க முடியும் அதே வேலையை B 20 நாட்களில் முடிக்க முடியும் இருவரும் சேர்ந்து 3 நாட்கள் வேலை செய்த பின்பு A அவரை விட்டு சென்றுவிட்டார் மீதி வேலையை B எத்தனை நாட்களில் முடிப்பார் (07/10/2017, 04/03/2020)
a. 9
b. 10
c. 12
d. 17
3.  X மற்றும் Y முறையே ஒரு வேலையை 40 மற்றும் 60 நாட்களில் தனித்தனியாக செய்து முடிப்பார்கள். 8 நாட்கள் அவர்கள் சேர்ந்து முடித்த பின் X என்பவர் விலகி விடுகிறார் அந்த வேலையை முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகும் (2017 G1)
a. 48
b. 44
c. 48
d. 40
4.  ஒரு வேலையை சீதா 15 நாட்களிலும் கீதா 10 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். இருவரும் சேர்ந்து வேலை தொடங்கியதும் சில நாட்களுக்குப் பிறகு சீதா சென்று விட்டால் மீதம் உள்ள வேலையை கீதா 5 நாட்களில் முடித்தாள் என்றால் சீதா எவ்வளவு நாட்கள் கழித்து சென்றிருப்பார் (2017 EO4)
a. 3
b. 6
c. 8
d. 10
5.  A மற்றும் B ஆகியோர்கள் ஒரு வேலையை முறையே 20 நாட்கள் மற்றும் 30 நாட்களில் செய்து முடிப்பார். அவர்கள் இருவரும் இணைந்து வேலை செய்ய தொடங்குகிறார்கள் வேலை முடிவதற்கு 5 நாட்களுக்கு முன்பாகவே நின்று விடுகிறார் B தனியாக வேலை செய்து அந்த வேலையை முடிக்கிறார் எனில் அந்த வேலை எத்தனை நாட்களில் முடிவடையும் (11/04/2019)
a. 15
b. 18
c. 12
d. 20
6.  எடுத்துக்காட்டு 4. 24
P மற்றும் Q ஆகியோர் ஒரு வேலையை முறையே 20 மற்றும் 30 நாள்களில் முடிப்பர் அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வேலையைத் தொடங்கினர். சில நாள்கள் வேலை செய்த பிறகு Q ஆனவர் சென்றுவிடுகிறார். மீதமுள்ள வேலையை P ஆனவர் 5 நாள்களில் முடிக்கிறார் எனில், தொடங்கியதிலிருந்து எத்தனை நாள்களுக்கு பிறகு Q வேலையை விட்டுச் சென்றார்? (8th New Book)
a. 6 நாள்கள்
b. 7 நாள்கள்
c. 8 நாள்கள்
d. 9 நாள்கள்
1.  ஒரு வெள்ள நிவாரண முகாமில் 250 மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் பொருட்கள் 20 நாட்களுக்கு வரும் 12 நாட்களுக்குப் பிறகு 150 மக்கள் அந்த முகாமை விட்டு சென்று விடுகின்றார்கள் எனில் மீதம் உள்ள உணவுப் பொருட்கள் எத்தனை நாட்களுக்கு வரும்?
a. 20.
b. 25
c. 30
d. 35
2.  120 பேர் 200 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வைத்துள்ளனர். 5 நாட்களுக்கு பிறகு 30 பேர் நோயால் இறந்து விடுகிறார்கள் எனில் மீதம் உள்ள உணவுப் பொருட்கள் எத்தனை நாட்களுக்கு இருக்கும்? (12/01/2019)
a. 150
b. 146 1/4
c. 245
d. 260
3.  120 பேர் 200 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வைத்துள்ளனர். 5 நாட்களுக்கு பிறகு 30 பேர் புதிதாக அவர்களுடன் சேர்ந்து கொண்டால் மீதி உணவுப்பொருட்கள் எத்தனை நாட்களுக்கு வரும்
a. 260
b. 156
c. 150
d. 245
4.  ஒரு கோட்டையில் வேலை பார்க்கும் 300 மனிதர்களுக்கு 90 நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளது. 20 நாட்களுக்குப் பிறகு 50 பேர் சென்று விட்டனர் மீதம் உள்ள உணவுப் பொருட்கள் எத்தனை நாட்களுக்கு வரும்? (19/02/2017 G1)
a. 160
b. 210
c. 84
d. 80
5.  276 வீரர்கள் உள்ள ஒரு பட்டாளத்தில் 20 நாட்களுக்குத் தேவையான சமையல் பொருள்கள் உள்ளது அந்தப் பொருள்கள் 46 நாள்களுக்கு நீடிக்க வேண்டுமெனில் எத்தனை வீரர்கள் இந்தப்பட்டாளத்தை விட்டுச் செல்ல வேண்டும் (2019 G1)
a. 136
b. 156
c. 146
d. 164
6.  ஒரு ராணுவ முகாமில் 800 வீரர்களுக்கு, 60 நாட்களுக்கு போதுமான உணவு உள்ளது. மேலும் புதிதாக 400 வீரர்கள் வந்து சேர்ந்தால் உணவு எத்தனை நாட்களுக்கு போதுமானது
a. 40 நாட்கள்
b. 30 நாட்கள்
c. 45 நாட்கள்
d. 35 நாட்கள்
7.  3000 பேர் அடங்கிய ஒரு காவலர் படையில் 30 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் இருந்தது. 10 நாட்களுக்குப் பிறகு 1000 பேர் புதிதாக வந்து சேர்ந்தால், இருப்பதில் உள்ள பொருட்களில் எத்தனை நாட்களுக்கு போதுமானது? (Postal Asst 2014)
a. 10
b. 15
c. 20
d. 11
8.  ஒரு வெள்ள நிவாரண முகாமில் 80 நபர்களுக்குத் தேவையான உணவு 60 நாள்களுக்குப் போதுமானதாக உள்ளது. 10 நாள்களுக்குப் பின்னர், 20 நபர்கள் அந்த முகாமில் வந்து சேர்ந்தார்கள் எனில், அவ்வுணவு எத்தனை நாள்களுக்குப் போதுமானதாக இருக்கும்? (7th (1) New Book 84)
a. 10 நாள்கள்
b. 6 நாள்கள்
c. 15 நாள்கள்
d. 5 நாள்கள்

0 Comments:

கருத்துரையிடுக

-->