TNPSC Ratio and Proportion New Book

TNPSC GROUP 1, 2/2A, 4, EO4 & TNEB, RRB, SI/PC
Minnal Vega Kanitham
TNPSC TIME & WORK New Book

1.  ₹ 1 இக்கும் ₹ 20 பைசாவுக்கும் உள்ள விகிதம் ________
a. 1 : 5
b. 1 : 2
c. 2 : 1
d. 5 : 1
2.  1 மீ இக்கும் 50 செமீ இக்கும் உள்ள விகிதம் __________.
a. 1 : 50
b. 50 : 1
c. 2 : 1
d. 1 : 2
3.  ஒரு சன்னலின் நீள அகலங்கள் முறையே 1 மீ மற்றும் 70 செமீ எனில் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம் ____________.
a. 1 : 7
b. 7 : 1
c. 7 : 10
d. 10 : 7
4.  முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்களின் எண்ணிக்கைகளுக்கு இடையே உள்ள விகிதம்
a. 4 : 3
b. 3 : 4
c. 3 : 5
d. 3 : 2
5.  அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்
a. 10 : 50
b. 50 : 10
c. 5 : 1
d. 1 : 5
6.   ₹1600 ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால், B இக்குக் கிடைக்கும் தொகை என்ன?
a. ₹ 480
b. ₹ 800
c. ₹1000
d. ₹200
7.  குமரனிடம் ₹ 600 உள்ளது. அதனை விமலா மற்றும் யாழினிக்கு இடையில் 2 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கிறார். இருவரில் யாருக்கு அதிகமாகக் கிடைக்கும்? எவ்வளவு?
a. ₹360, ₹240
b. ₹350, ₹250
c. ₹300, ₹300
d. ₹320, ₹260
8.  ஓர் குடும்பத்தில் மாதச் செலவுகளில் மளிகைக்கும் காய்கறிகளுக்கும் ஆகும் செலவுகளின் விகிதம் 3 : 2. இவை இரண்டிற்கும் ஒரு மாதத்திற்கு ₹4000, ஒதுக்கப்பட்டால்
(i) மளிகை
a. ₹1600
b. ₹2400
c. ₹2500
d. ₹1500
9.  ஓர் குடும்பத்தில் மாதச் செலவுகளில் மளிகைக்கும் காய்கறிகளுக்கும் ஆகும் செலவுகளின் விகிதம் 3 : 2. இவை இரண்டிற்கும் ஒரு மாதத்திற்கு ₹4000, ஒதுக்கப்பட்டால்
(ii) காய்கறி ஆகியவற்றிற்காகும் செலவுகளைக் காண்க.
a. ₹1600
b. ₹2400
c. ₹2500
d. ₹1500
10.  1 : 2 என்ற விகிதத்தில் 63 செ மீ நீளமுள்ள ஒரு கோட்டுத் துண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டால் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க.
a. 36cm, 27cm
b. 21cm, 42cm
c. 27cm, 36cm
d. 42cm, 21cm
11.  விகிதசமன் பின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும்?
a. 3 : 5 , 6 : 11
b. 2 : 3, 9 : 6
c. 2 : 5, 10 : 25
d. 3 : 1, 1 : 3
12.   2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், ‘x’ = ?
a. 50
b. 4
c. 10
d. 8
13.  7:5 ஆனது x : 25 இக்கு விகிதச்சமம் எனில், ‘x’ இன் மதிப்பு காண்க.
a. 27
b. 49
c. 35
d. 14
14.  கீழ்க்காணும் விகிதங்களில் எது பெரிய விகிதம்?
(i) 4 : 5 அல்லது 8 : 15
(ii) 3 : 4 அல்லது 7 : 8
(iii) 1 : 2 அல்லது 2 : 1
a. (i) 8 : 15ஐ விட 4 : 5 பெரிய விகிதம்
b. (ii) 3 : 4ஐ விட 7 : 8 பெரிய விகிதம்
c. (iii) 1 : 2ஐ விட 2 : 1 பெரிய விகிதம்
d. அனைத்தும் சரி
15.  1/2, 1/4, 6/8, 1/8 ஆகிய பின்னங்களைச் சிறியதிலிருந்து பெரியது வரை வரிசைப்படுத்துக.
a. 1/8<1/4<1/2<6/8
b. 6/8<1/4<1/2<1/8
c. 1/8<1/2<1/4<6/8
d. 1/4<1/8<1/2<6/8
16.  விதைக்கப்பட்ட முதல் நாளிலிருந்து, இரண்டு தாவரங்களின் வளர்ச்சியை நாள்தோறும் முத்து குறித்துக் கொண்டிருக்கிறான். 10 நாள்களில், முதல் செடி 1/4 அங்குலமும், மற்றொன்று 3/8 அங்குலமும் வளர்ந்திருக்கிறது எனில், அதிகம் வளர்ந்திருந்த செடி எது?
a. 1/4
b. 3/8
c. மேற்கண்ட அனைத்தும்.
d. எதுவும் இல்லை
17.  கீழ்க்கண்டவற்றில் எது தகுபின்னம் அல்ல?
a. 1/3
b. 2/3
c. 5/10
d. 10/5
18.  1/7 இக்குச் சமான பின்னம் ______.
a. 2/15
b. 1/49
c. 7/49 ...
d. 100/7
19.  அகிலன் 1 மணி நேரத்தில் 10 கிமீ நடக்கிறான். செல்வி 1 மணி நேரத்தில் 6 கிமீ நடக்கிறாள். எனில், அகிலன் மற்றும் செல்வி நடந்த தொலைவுகளுக்கு உள்ள விகிதத்தைச் சுருக்கிய வடிவில் காண்க.
a. 5:3
b. 3:5
c. 10:6
d. 6:10
20.  ஒரு மிதிவண்டியின் நிறுத்தக் கட்டணம் Rs 5. மேலும், ஓர் இரு சக்கர வாகனத்தின் நிறுத்தக் கட்டணம் Rs 15. இரண்டு இரு சக்கர வாகன மற்றும் இரண்டு மிதிவண்டி நிறுத்தக் கட்டணங்களுக்கு இடையே உள்ள விகிதத்தைக் காண்க.
a. 1:3
b. 3:1
c. 5:3
d. 3:5

0 Comments:

கருத்துரையிடுக

-->