6th New Tamil Book Unit -1
1. தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) பாரதியார்
B) வாணிதாசன்
C) தாராபாரதி
D) பாரதிதாசன்
2. தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! – என்ற பாடல் வரி ‘_________’ என்ற நூலில் ‘தமிழ்’ என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது.
A) பாரதியார் கவிதைகள்
B) பாரதிதாசன் கவிதைகள்
C) வாணிதாசன் கவிதைகள்
D) பெருஞ்சித்திரனார் கவிதைகள்
3. தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! – என்ற பாடல் பாடல்வரியோடு தொடர்பான வார்த்தையைத் தேர்ந்தெடு?
A) கன்னித்தமிழ்
B) அழகிய தமிழ்
C) இன்பத்தமிழ்
D) தொன்மைத்தமிழ்
4. தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) பாரதியார்
B) வாணிதாசன்
C) தாராபாரதி
D) பாரதிதாசன்
5. தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்! – என்ற பாடல் வரி ‘____________’ என்ற நூலில் ‘தமிழ்’ என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது.
A) பாரதியார் கவிதைகள்
B) பாரதிதாசன் கவிதைகள்
C) வாணிதாசன் கவிதைகள்
D) பெருஞ்சித்திரனார் கவிதைகள்
6. தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் – இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! – என்ற பாடல் பாடல்வரியோடு தொடர்பான வார்த்தையைத் தேர்ந்தெடு?
A) கன்னித்தமிழ்
B) அழகிய தமிழ்
C) இன்பத்தமிழ்
D) தொன்மைத்தமிழ்
7. கண்ணே! மணியே! என்று குழந்தையைக் கொஞ்சுவதும் உண்டு. அது போல _________________ என்பவர் நம் செந்தமிழுக்குப் பெயர்கள் பல சூட்டி மகிழ்ந்துள்ளார்.
A) இளங்கோவடிகள்
B) உமறுப்புலவர்
C) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
D) பாரதிதாசன்
8. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
I. நிருமித்த – உருவாக்கிய
II. விளைவு – வளர்ச்சி
III. சமூகம் – மக்கள் குழு
IV. அசதி – சோர்வு
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) III, IV மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
9. தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான ______________ போன்றது. நல்ல புகழ்மிகுந்த புலவர்களுக்குக் கூர்மையான வேல் போன்ற கருவியாகும்.
A) நீர்
B) உணவு
C) பால்
D) அமிர்தம்
10. தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது. இன்பத்தமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் ____________ போன்றது.
A) நீர்
B) தேன்
C) பால்
D) அமிர்தம்
11. தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க ____________ ஆகும்.
A) சக்தி
B) அணிகலன்
C) வாள்
D) இவற்றில் ஏதுமில்லை
12. பாரதிதாசனின் இயற்பெயர் ___________________ ஆகும்.
A) செந்தமிழ்தாசன்
B) வணங்கா முடி
C) ராமலிங்கம்
D) கனக சுப்புரத்தினம்
13. பாரதிதாசன் அவர்கள் _________________ என்பவரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
A) பெருஞ்சித்திரனார்
B) நாமக்கல் கவிஞர்
C) பாரதியார்
D) மீனாட்சி சுந்தரனார்
14. தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளவர் யார்?
A) பாரதியார்
B) வாணிதாசன்
C) தாராபாரதி
D) பாரதிதாசன்
15. புரட்சிக்கவி, பாவேந்தர் என்று போற்றப்படுகிறவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) தாராபாரதி
D) வாணிதாசன்
16. தமிழுக்கு நிலவு என்று பெயர். இன்பத்தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான _____________ போன்றது.
A) நீர்
B) நெருப்பு
C) உணவு
D) காற்று
17. தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும் அமிழ்தே நீ இல்லை என்றால் – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
B) நெல்லை சு.முத்து
C) காசி ஆனந்தன்
D) அறிவுமதி
18. அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும் தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
B) நெல்லை சு.முத்து
C) காசி ஆனந்தன்
D) அறிவுமதி
19. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________
A) நிலயென்று
B) நிலவென்று
C) நிலவன்று
D) நிலவுஎன்ற
20. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________
A) தமிழங்கள்
B) தமிழெங்கள்
C) தமிழுங்கள்
D) தமிழ்எங்கள்
21. ’அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
A) அமுது + தென்று
B) அமுது + என்று
C) அமுது + ஒன்று
D) அமு + தென்ற
22. ‘செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
A) செம்மை + பயிர்
B) செம் + பயிர்
C) செமை + பயிர்
D) செம்பு + பயிர்
23. இன்பத்தமிழ் – பாடலின் கருத்தின்படி சரியானது எது?
I. விளைவுக்கு – நீர்
II. அறிவுக்கு – தோள்
III. இளமைக்கு – பால்
IV. புலவர்க்கு – வேல்
A) I, II மட்டும் சரி
B) III மட்டும் சரி
C) I, II, III, IV அனைத்தும் சரி
D) IV மட்டும் சரி
24. கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம் எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி! – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
A) பெருஞ்சித்திரனார்
B) நாமக்கல் கவிஞர்
C) பாரதியார்
D) மீனாட்சி சுந்தரனார்
25. ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும் ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமலே நிலை நின்றதுவாம்! – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) குயில்
B) கனிச்சாறு
C) கண்ணன் பாட்டு
D) தென்மொழி
26. பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் – அன்பு பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர் மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த மேதினி வாழ்வழி காட்டிருக்கும்! – என்ற பாடல்வரியின் ஆசிரியரின் இயற்பெயர் என்ன?
A) பெருஞ்சித்திரனார் (மாணிக்கம்)
B) பெருஞ்சித்திரனார் (ராஜதுரை)
C) பெருஞ்சித்திரனார் (பிச்சை முத்து)
D) பெருஞ்சித்திரனார் (ராஜ வர்மன்)
27. சொல்லும் பொருளும் – சரியானவற்றை தேர்ந்தெடு.
I. ஆழிப் பெருக்கு – கடல் கோள்
II. உள்ளப்பூட்டு – உள்ளத்தின் அறியாமை
III. மேதினி – உலகம்
IV. ஊழி – நீண்டதொரு காலப்பகுதி
A) I, II மட்டும் சரி
B) III மட்டும் சரி
C) I, II, III, IV அனைத்தும் சரி
D) IV மட்டும் சரி
28. பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி. அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்ட மொழி. பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி – என்று கூறியவர் யார்?
A) திரு.வி.க
B) அயோத்திதாச பண்டிதர்
C) பெருஞ்சித்திரனார்
D) கவிமணி
29. தமிழ், பொய்யை அகற்றும் மொழி; அது மனத்தின் அறியாமையை நீக்கும் மொழி; அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழி; உயிர் போன்ற உண்மையை ஊட்டும் மொழி ; உயர்ந்த அறத்தைத் தரும் மொழி. இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி தமிழ்மொழி – என்று கூறியவர் யார்?
A) திரு.வி.க
B) அயோத்திதாச பண்டிதர்
C) கவிமணி
D) பெருஞ்சித்திரனார்
30. பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?
A) கோமல் சுவாமிநாதன்
B) திரு.வி.க
C) பெருஞ்சித்திரனார்
D) மீனாட்சி சுந்தரனார்
31. கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களின் ஆசிரியர் யார்?
A) கோமல் சுவாமிநாதன்
B) பெருஞ்சித்திரனார்
C) மீனாட்சி சுந்தரனார்
D) திரு.வி.க
32. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தியவர் யார்?
A) பெருஞ்சித்திரனார்
B) கவிமணி
C) சுந்தரனார்
D) பாரதியார்
33. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் யார்?
A) கோமல் சுவாமிநாதன்
B) திரு.வி.க
C) மீனாட்சி சுந்தரனார்
D) பெருஞ்சித்திரனார்
34. கனிச்சாறு என்னும் நூல் __________________ தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது.
A) 6
B) 7
C) 8
D) 9
35. வான்தோன்றி வளி தோன்றி நெருப்புத் தோன்றி மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி ஊன் தோன்றி உயிர் தோன்றி உணர்வு தோன்றி – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
A) பாரதிதாசன்
B) கவிமணி
C) வாணிதாசன்
D) பாரதியார்
36. ஒளி தோன்றி ஒலி தோன்றி வாழ்ந்த அந்நாள், தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி! – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
A) உ.வே.சா
B) வாணிதாசன்
C) மீனாட்சி சுந்தரனார்
D) பாரதியார்
37. தாய் மொழியில் படித்தால் _____________ அடையலாம்.
A) பன்மை
B) மேன்மை
C) பொறுமை
D) சிறுமை
38. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ________________ சுருங்கிவிட்டது.
A) மேதினி
B) நிலா
C) வானம்
D) காற்று
39. ’செந்தமிழ்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________________.
A) செந் + தமிழ்
B) செம் + தமிழ்
C) சென்மை + தமிழ்
D) செம்மை + தமிழ்
40. ’பொய்யகற்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________.
A) பொய் + அகற்றும்
B) பொய் + கற்றும்
C) பொய்ய + கற்றும்
D) பொய் + யகற்றும்
41. பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____________
A) பாட்டிருக்கும்
B) பாட்டுருக்கும்
C) பாடிருக்கும்
D) பாடியிருக்கும்
42. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____________
A) எட்டுத்திசை
B) எட்டிதிசை
C) எட்டுதிசை
D) எட்டிஇசை
43. மனிதரைப் பிற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் காட்டுவது _______.
A) செயல்
B) சிந்தனை
C) அறிவு
D) மொழி
(குறிப்பு – மொழி, நாம் சிந்திக்க உதவுகிறது. சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுகிறது. பிறர் கருத்தை நாம் அறிய உதவுவதும் மொழியே.)
44. உலகில் _________________ மேற்பட்ட மொழிகள் உள்ளன.
A) 4000 க்கும்
B) 5000 க்கும்
C) 6000 க்கும்
D) 7000 க்கும்
45. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் – என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடியவர் யார்?
A) வாணிதாசன்
B) ஈராஸ் பாதிரியார்
C) கால்டுவெல்
D) பாரதியார்
46. என்று பிறந்தவள் என்று உணராத இயல் பினளாம் எங்கள் தாய்! என்று பாரதத்தாயின் தொன்மையைப் பற்றி ________________ என்பவர் கூறிய கருத்து தமிழ்த்தாய்க்கும் பொருந்துவதாக உள்ளது.
A) பாரதியார்
B) ஈராஸ் பாதிரியார்
C) கால்டுவெல்
D) வாணிதாசன்
47. _______________ தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் ஆகும்.
A) மணிமேகலை
B) தொல்காப்பியம்
C) கம்பராமாயணம்
D) கலித்தொகை
48. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் ___________ எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
A) வலக்கை
B) இடஞ்சுழி
C) வலஞ்சுழி
D) இடக்கை
(குறிப்பு – (எ.கா.) வலஞ்சுழி எழுத்துகள் – அ, எ, ஔ, ண, ஞ; இடஞ்சுழி எழுத்துகள் – ட , ய, ழ)
49. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
I. தமிழ் – தொல்காப்பியம் – தமிழென் கிளவியும் அதனோ ரற்றே- தொல் : (386)
II. தமிழ்நாடு – சிலப்பதிகாரம் (வஞ்சிக்காண்டம்) – இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின் – வஞ்சி : (165)
III. தமிழன் – அப்பர் தேவாரம் – … தமிழன் கண்டாய் – திருத்தாண்டகம் : (23)
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) III மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
50. ___________ என்பது ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல்.
A) சீர்மை
B) செழுமை
C) வளமை
D) இவற்றில் ஏதுமில்லை
51. திணை எத்தனை வகைப்படும்?
A) 1
B) 2
C) 3
D) 4
(குறிப்பு – உயர்திணை, அஃறிணை என இருவகைத் திணைகளை அறிவோம். உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை என அமையவேண்டும். ஆனால் தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயர் இட்டனர் நம் முன்னோர். பாகற்காய் கசப்புச்சுவை உடையது. அதனைக் கசப்புக்காய் என்று கூறாமல், இனிப்பு அல்லாத காய் பாகற்காய் (பாகு + அல் + காய்) என வழங்கினர். இவ்வாறு பெயரிடுவதிலும் சீர்மை மிக்கது தமிழ் மொழி.)
52. பூ வின் ____________ நிலைகளுக்கும் தோன்றுவது முதல் உதிர்வது வரை தனித்தனிப் பெயர்கள் தமிழில் உண்டு.
A) நான்கு
B) ஐந்து
C) ஆறு
D) ஏழு
53. ‘________’ – என்னும் ஒரு சொல் மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு போன்ற பல பொருள்களைத் தருகிறது.
A) கா
B) மா
C) வீ
D) ஆ
54. தமிழுக்கு _______________ என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இயல்தமிழ் எண்ணத்தை வெளிப்படுத்தும்; இசைத்தமிழ் உள்ளத்தை மகிழ்விக்கும்; நாடகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்வின் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டும்.
A) முத்தமிழ்
B) வித்தமிழ்
C) கனித்தமிழ்
D) இவற்றில் ஏதுமில்லை
55. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?
I. தமிழில் காலந்தோறும் பல வகையான இலக்கியவடிவங்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன. துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள், போன்றன தமிழ்க் கவிதை வடிவங்கள். கட்டுரை, புதினம், சிறுகதை போன்றன உரைநடை வடிவங்கள்.
II. தற்போது அறிவியல் தமிழ், கணினித்தமிழ் என்று மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது.
A) I மட்டும் தவறு
B) II மட்டும் தவறு
C) I மட்டும் சரி
D) I, II அனைத்தும் சரி
56. தாவர இலைப் பெயர்கள் – சரியானது எது?
I. ஆல், அரசு, மா, பலா, வாழை – இலை
II. அகத்தி, பசலை, முருங்கை – கீரை
III. அருகு, கோரை – புல்
IV. நெல், வரகு – தாள்
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) III மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
57. தாவர இலைப் பெயர்கள் – சரியானது எது?
I. மல்லி – தழை
II. சப்பாத்திக் கள்ளி, தாழை – மடல்
III. கரும்பு, நாணல் – தோகை
IV. பனை, தென்னை – ஓலை
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) III மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
58. தாவர இலைப் பெயர்கள் – கமுகு (பாக்கு) எந்த வகையைச் சார்ந்தது?
A) ஓலை
B) கூந்தல்
C) தோகை
D) மடல்
59. தமிழ் எண்களை அறிவோம் – சரியானது எது?
I. 1 – ௧
II. 2 – ௨
III. 3 – ௩
IV. 4 – ௪
A) I மட்டும் சரி
B) I, II மட்டும் சரி
C) I, II, III, IV அனைத்தும் சரி
D) III, IV மட்டும் சரி
60. தமிழ் எண்களை அறிவோம் – சரியானது எது?
I. 5 – ௫
II. 6 – ௬
III. 7 – ௭
IV. 8 – ௮
A) I மட்டும் சரி
B) I, II மட்டும் சரி
C) III, IV மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
61. தமிழ் எண்களை அறிவோம் – சரியானது எது?
I. 1 – ௧
II. 2 – ௨
III. 9 – ௯
IV. 10 – ௧ ௦
A) I மட்டும் சரி
B) I, II, III, IV அனைத்தும் சரி
C) I, II மட்டும் சரி
D) III, IV மட்டும் சரி
62. சொல் மற்றும் இடம்பெற்ற நூல் சரியானது எது?
I. வேளாண்மை – கலித்தொகை (101), திருக்குறள் (81)
II. உழவர் – நற்றிணை (4)
III. பாம்பு – குறுந்தொகை (239)
IV. வெள்ளம் – பதிற்றுப்பத்து (15)
A) I, II, III மட்டும் சரி
B) I, II, III, IV அனைத்தும் சரி
C) III, IV மட்டும் சரி
D) IV மட்டும் சரி
63. சொல் மற்றும் இடம்பெற்ற நூல் சரியானது எது?
I. முதலை – குறுந்தொகை (324)
II. கோடை – அகநானூறு (42)
III. உலகம் – தொல்காப்பியம், கிளவியாக்கம் (56), திருமுருகாற்றுப்படை (1)
IV. மருந்து – அகநானூறு (147), திருக்குறள் (952)
A) I, II, III, IV அனைத்தும் சரி
B) I, II, III மட்டும் சரி
C) III, IV மட்டும் சரி
D) IV மட்டும் சரி
64. சொல் மற்றும் இடம்பெற்ற நூல் சரியானது எது?
I. ஊர் – தொல்காப்பியம், அகத்திணையியல் (41)
II. அன்பு – தொல்காப்பியம், களவியல் (110), திருக்குறள் (84)
III. உயிர் – தொல்காப்பியம், கிளவியாக்கம் (56), திருக்குறள் (955)
IV. மகிழ்ச்சி – தொல்காப்பியம், கற்பியல் (142), திருக்குறள் (531)
A) I மட்டும் சரி
B) I, II, III மட்டும் சரி
C) III, IV மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
65. சொல் மற்றும் இடம்பெற்ற நூல் சரியானது எது?
I. மீன் – குறுந்தொகை (54)
II. புகழ் – தொல்காப்பியம், வேற்றுமையியல் (71)
III. அரசு – திருக்குறள் (554)
IV. செய் – குறுந்தொகை (72)
A) I, II, III மட்டும் சரி
B) I, II, III, IV அனைத்தும் சரி
C) III, IV மட்டும் சரி
D) IV மட்டும் சரி
66. சொல் மற்றும் இடம்பெற்ற நூல் சரியானது எது?
I. செல் – தொல்காப்பியம், (75) புறத்திணையியல்
II. பார் – பெரும்பாணாற்றுப்படை (435)
III. ஒழி – தொல்காப்பியம், கிளவியாக்கம் (48)
IV. முடி – தொல்காப்பியம், வினையியல் (206)
A) I, II, III மட்டும் சரி
B) III, IV மட்டும் சரி
C) I, II, III, IV அனைத்தும் சரி
D) IV மட்டும் சரி
67. நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும்! வானம் தீண்டும் தூரம்-நீ, வளர்ந்து வாழ வேண்டும்! அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்! பரிவு வேண்டும்! எட்டுத்திக்கும் புகழ வேண்டும்! எடுத்துக்காட்டு ஆக வேண்டும்! – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) திரு.வி.க
B) தாராபாரதி
C) அறிவுமதி
D) மீனாட்சி சுந்தரனார்
68. உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுதவேண்டும்! சர்க்கரைத் தமிழ் அள்ளி, தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்! பிறந்தநாள் வாழ்த்துகள்! பிறந்தநாள் வாழ்த்துகள்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) திரு.வி.க
B) தாராபாரதி
C) அறிவுமதி
D) மீனாட்சி சுந்தரனார்
69. ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் ____________
A) புதுமை
B) பழமை
C) பெருமை
D) சீர்மை
70. ‘இடப்புறம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________.
A) இடன் + புறம்
B) இட + புறம்
C) இடம் + புறம்
D) இடப் + புறம்
71. ‘சீரிளமை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________.
A) சீர் + இளமை
B) சீர்மை + இளமை
C) சீரி + இளமை
D) சீற் + இள
72. சிலம்பு + அதிகாரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________________.
A) சிலம்பதிகாரம்
B) சிலப்பதிகாரம்
C) சிலம்புதிகாரம்
D) சில பதிகாரம்
73. கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________.
A) கணினிதமிழ்
B) கணினித்தமிழ்
C) கணிணிதமிழ்
D) கனினிதமிழ்
74. “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் _____________.
A) கண்ணதாசன்
B) பாரதியார்
C) பாரதிதாசன்
D) வாணிதாசன்
75. ‘மா’ என்னும் சொல்லின் பொருள் _____________.
A) மாடம்
B) வானம்
C) விலங்கு
D) அம்மா
76. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?
I. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்பது அறிவியல் உண்மை. தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் என்னும் நூலில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியும் உள்ளார்.
II. கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது, திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
A) I தவறு
B) II தவறு
C) I, II இரண்டுமே தவறு
D) I, II இரண்டுமே சரி
77. திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது – என்ற அறிவியல் கருத்து “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நால் நாழி” ஆகும். – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) தொல்காப்பியர்
B) மாணிக்கவாசகர்
C) ஒளவையார்
D) இளங்கோவடிகள்
78. போர்க்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி _______________ என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
A) நற்றிணை
B) கார்நாற்பது
C) தொல்காப்பியம்
D) பதிற்றுப்பத்து
79. நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) நற்றிணை
B) பதிற்றுப்பத்து
C) தொல்காப்பியம்
D) கார்நாற்பது
80. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தி ____________ என்னும் நூலில் காணப்படுகிறது. முற்கால இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள அறுவை மருத்துவத்துக்கான இன்றைய கூறுகள் வியப்பளிக்கின்றன அல்லவா?
A) நற்றிணை
B) பதிற்றுப்பத்து
C) தொல்காப்பியம்
D) கார்நாற்பது
81. தொலைவில் உ ள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும். அறிவியல் அறிஞர் கலீலியோ நிறுவிய கருத்து இது. இக்கருத்து திருவள்ளுவமாலை என்னும் நூலில் _________ எழுதிய பாடலில் இடம்பெற்றுள்ளது.
A) நல்லாதனார்
B) கபிலர்
C) தொல்காப்பியர்
D) மாணிக்க வாசகர்
82. நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) நற்றிணை
B) பதிற்றுப்பத்து
C) தொல்காப்பியம்
D) கார்நாற்பது
83. கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) நற்றிணை
B) பதிற்றுப்பத்து
C) தொல்காப்பியம்
D) கார்நாற்பது
84. கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர் – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) நற்றிணை
B) பதிற்றுப்பத்து
C) தொல்காப்பியம்
D) கார்நாற்பது
85. தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) நற்றிணை
B) பதிற்றுப்பத்து
C) திருவள்ளுவமாலை
D) கார்நாற்பது
86. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ___________.
A) 4
B) 5
C) 6
D) 7
(குறிப்பு – தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ஐந்து. எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம் )
87. _______________ என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது.
A) ஒலிப்பு
B) மாத்திரை
C) வடிவம்
D) நேரம்
(குறிப்பு – மாத்திரை என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவாகும். குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு – 1 மாத்திரை. நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு – 2 மாத்திரை)
88. மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு?
A) கால் மாத்திரை
B) அரை மாத்திரை
C) ஒரு மாத்திரை
D) இரண்டு மாத்திரை
89. ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு?
A) கால் மாத்திரை
B) அரை மாத்திரை
C) ஒரு மாத்திரை
D) இரண்டு மாத்திரை
90. கபிலர் – என்னும் பெயரில் உள்ள மாத்திரை அளவைக் கண்டுபிடி?
A) 2
B) 2.5
C) 3
D) 3.5
91. கலைச் சொல் அறிவோம் – சரியானது எது?
I. குரல்தேடல் – Voice Search
II. இணையம் – Internet
III. இடஞ்சுழி – Anti Clock wise
IV. வலஞ்சுழி – Clock wise
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) III, IV மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
92. கலைச் சொல் அறிவோம் – சரியானது எது?
I. செயலி – App
II. முகநூல் – Facebook
III. தொடுதிரை – Touch Screen
IV. தேடுபொறி – Search engine
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) III, IV மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
93. கலைச் சொல் அறிவோம் – சரியானது எது?
I. புலனம் – Whatsapp
II. மின்னஞ்சல் – E-mail
III. தொடுதிரை – Touch Screen
IV. தேடுபொறி – Search engine
A) I, II மட்டும் சரி
B) I, II, III, IV அனைத்தும் சரி
C) III, IV மட்டும் சரி
D) II, III மட்டும் சரி
94. பொருத்துக:
I. இலக்கண நூல்கள் – தொல்காப்பியம், நன்னூல்
II. சங்க இலக்கியம் – எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
III. அறநூல்கள் – நாலடியார், திருக்குறள்
IV. காப்பியங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை
A) I, II மட்டும் சரி
B) I, II, III, IV அனைத்தும் சரி
C) III, IV மட்டும் சரி
D) II, III மட்டும் சரி
0 Comments:
கருத்துரையிடுக