1) 3 புத்தகங்களின் விலை ₹ 90 எனில் 12 புத்தகங்களின் விலை. (7th New Book Back)
a. ₹ 300
b. ₹ 320
c. ₹ 360 ✔
d. ₹ 400
2) 8 ஆப்பிள்களின் விலை ₹56 எனில் 12 ஆப்பிள்களின் விலை ________. (7th New Book)
a. ₹ 84✔
b. ₹ 85
c. ₹ 86
d. ₹ 87
3) மணி 5 கி.கி உருளைக்கிழங்கை ₹ 75 இக்கு வாங்குகிறார் எனில், அவர் ₹105 இக்கு ______ கி.கி உருளைக்கிழங்கை வாங்குவார்.
(7th New Book)
a. 6
b. 7✔
c. 8
d. 5
4) ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது எனில், அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும், மிதிவண்டிகளின் எண்ணிக்கை _______ (7th New Book Back)
a) 150
b) 70
c)100
d) 147✔
5) 280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில் 1400 நபர்கள் ______ முறை பயணம் செய்யலாம். (03-05-2023) (7th New Book Back)
(A) 8
(B) 9
(C) 10✔
(D) 12
6) 50 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்க 3கி.கி சர்க்கரை தேவைப்படுகிறது
எனில், 150 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்கத் தேவையான சர்க்கரை யின் அளவு ____. (7th New book Back)
a. 9✔
b. 10
c. 15
d. 6
7) ஒரு சூடேற்றி 40 நிமிடங்களில் 3 அலகுகள் மின்சாரத்தை
பயன்படுத்துகிறது. இரண்டு மணி நேரத்தில் எத்தனை அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்தும்? (6th New Book) [08-10-2022] (03-05-2023)
(A) 9 அலகுகள்✔
(B) 10 அலகுகள்
(C) 11 அலகுகள்
(D) 12 அலகுகள்
8) 24 பென்சில்களை 6 குழந்தைகளுக்குச் சமமாகப்
பிரித்துக் கொடுக்கின்றனர். அதே போல்கொடுத்தால் 18 குழந்தைகளுக்குத் தேவையான
பென்சில்களின் எண்ணிக்கை எவ்வளவு? (7th New Book)
a. 72✔
b. 82
c. 70
d. 52
9)
ஒரு குறிப்பிட்ட வேகத்தில்
ஒரு புத்தகத்தை படிக்கும் ஒருவர் 20 பக்கங்களை படிக்க 2
மணி நேரமாகிறது. அவர் அதே
வேகத்தில் அதே புத்தகத்தில் 50 பக்கங்களை படிக்க எவ்வளவு
நேரமாகும்? [2022 Group 2]
a. 3 மணிநேரம்
b. 4 மணிநேரம்
c. 5 மணிநேரம்✔
d.4.5 மணிநேரம்
10) 12 மாணவர்களுக்குச் சீருடை வழங்க ₹3,000 செலவாகும் எனில் ₹1,250 க்கு பெறும் மாணவர்களின் எண்ணிக்கை? (20-05-2023)
(A) 6 மாணவர்கள்
(B) 8 மாணவர்கள்
(C) 5 மாணவர்கள்✔
(D) 7 மாணவர்கள்
11) அன்பு 2 நோட்டுப் புத்தகங்களை ₹24 இக்கு வாங்கினார். அவர் அதே
அளவுள்ள 9 நோட்டுப் புத்தகங்களை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்? (7th New Book)
a. 102
b. 104
c. 108✔
d. 110
12) ஒரு மகிழுந்து 60 கி.மீ தூரத்தைக் கடக்க 3 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது.
அதே மகிழுந்து 200 கி.மீ தூரத்தைச் சென்றடைய, தேவையான பெட்ரோலின் அளவு _______. (7th New Book)
a. 8 லிட்டர்கள்
b. 9 லிட்டர்கள்
c. 10 லிட்டர்கள்✔
d. 11 லிட்டர்கள்
0 Comments:
கருத்துரையிடுக