Simple Interest Class - 1

1) பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஓராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும். [7th New Book Back]
(A) ₹ 200
(B) ₹ 10
(C) ₹ 100✔
(D) ₹ 1,000

2) ₹5000 க்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளி்ல கிடைக்கும் தனிவட்டி யாது? (09-11-2024 TNPSC), (2019 Group 8)
(A) ₹25
(B) ₹2500✔
(C) ₹250
(D) ₹500

3) அசோக் ரூ.10,000 ஆண்டுக்கு 8% என்ற வட்டி வீதத்தில் ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளார். 5 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டியை காண்க. (2019 TNPSC)
(A) 2,000
(B) 40,000
(C) 4,000✔
(D) 5,000

4) ₹ 25,000 இக்கு 8% வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்குத் தனிவட்டி காண்க. (7th New Book), (18-11-2024 TNPSC)
(A) ₹ 5,000
(B) ₹ 6,000✔
(C) ₹ 7,000
(D) ₹ 8,000

5) ஸ்டீபன் என்பவர் தனது வங்கியின் சேமிப்புக் கணக்கில்  ₹ 10,000 ஐ 2% தனிவட்டி வீதத்தில் முதலீடு செய்தார் எனில், 4 ஆண்டுகளின் முடிவில் அவர் பெறும் தனிவட்டி எவ்வளவு? (7th New Book)
(A) ₹ 500
(B) ₹ 600
(C) ₹ 700
(D) ₹ 800✓

6) ₹ 35,000 இக்கு ஆண்டுக்கு 9% வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளுக்குத் தனிவட்டியைக் காண்க? (7th New Book), (05-02-2024 TNPSC)
(A) ₹ 6,000
(B) ₹ 6,300✔
(C) ₹ 7,000
(D) ₹ 7,300

7) அரவிந்த் என்பவர் ₹ 8,000 ஐ, ஆகாஷ் என்பவரிடமிருந்து ஆண்டுக்கு 7% தனிவட்டி வீதம் கடனாகப் பெற்றார். இரண்டு ஆண்டுகளின் முடிவில் அரவிந்த் செலுத்த வேண்டிய தனிவட்டியையும் மொத்தத் தொகையையும் காண்க? (7th New Book)
(A) ₹ 9,000
(B) ₹ 9,100
(C) ₹ 9,120✔
(D) ₹ 9,150

8) அர்ஜுன் ஒரு வங்கியிலிருந்து ஆண்டுக்கு 5% வட்டி வீதம் ₹ 5000 ஐக் கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகளின் முடிவில் அவர் செலுத்த வேண்டிய வட்டியையும் மொத்தத் தொகையையும் காண்க? (7th New Book)
(A) ₹ 5,500
(B) ₹ 5,720
(C) ₹ 5,750✔
(D) ₹ 5,850

9) சாந்தி ஒரு வங்கியிலிருந்து, ஆண்டுக்கு 12% வட்டி வீதம் ₹6,000 ஐ 7 ஆண்டுகளுக்குக் கடனாகப் பெற்றார் எனில், 7 ஆண்டுகள் கழித்து அவர் எவ்வளவு பணத்தைச் செலுத்தினால் கடன் தீரும்? (7th New Book)
(A) ₹ 11,000
(B) ₹ 11,020
(C) ₹ 11,040✔
(D) ₹ 11,140

10) ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு ₹ 4,500 அசலுக்கு மொத்தத் தொகை ₹ 5,000 கிடைத்தால், அதனுடைய தனிவட்டி (7th New Book Back)
(A) ₹ 500✔
(B) ₹ 200
(C) 20%
(D) 15%

0 Comments:

கருத்துரையிடுக

-->