
Simple Interest Class - 4
40) ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ.1000ஆனது, ரூ.1150 ஆக மாறுகிறது. வட்டிவீதம் 3% கூடுதலாக இருப்பின், அதன் தற்போதைய மொத்த மதிப்பு. (TNPSC-GII- 2014)
(A) ₹.1400
(B) ₹.1300
(C) ₹.1140
(D) ₹.1240✓
41) ரூ.800 ஆனது, தனிவட்டி வீதத்தில், 3 ஆண்டுகளில் ரூ.920 ஆக மாறுகிறது. அதன் வட்டிவீதம் 3% அதிகரிக்கப்பட் டால், கிடைக்கும் மொத்தத்தொகை (2013 Group 2)
(A) ₹ 1092
(B) ₹ 992✓
(C) ₹ 1882
(D) ₹ 1182
42) குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ரூ.800 ஆனது, மூன்றாண்டு களில் ரூ.956ஆக உயர்கிறது. தனிவட்டி வீதத்தை 4% அதிகரித்தால், மூன்றாண்டுகளுக்குப்பின், அவருக்குக் கிடைக்கும் தொகை (TNPSC - GIV - 2013)
(A) ₹ 1020.80
(B) ₹ 1025
(C) ₹ 1052✓
(D) ₹ 1080.20
43) விக்னேஷ் 2 ஆண்டுகளுக்கு 4 % வட்டி வீதத்தில் ₹10000 கடனாக பெற்றார். இந்தப் பணத்தை சஞ்சையிடம் 2 ஆண்டுகளுக்கு 6 சதவீத வட்டி வீதத்தில் கடனாகக் கொடுத்தார். இந்தப் பரிமாற்றத்தில் அவருக்கு கிடைத்த ஓர் ஆண்டின் லாபம் என்ன? (2024 Group 4)
(A) 200✓
(B) 400
(C) 600
(D) 800
44) ஒருவர் ரூ.5000ஐ, 4% வட்டிவீதத்தில், 2 ஆண்டுகளுக்குக் கடனாகப் பெறுகிறார். அன்றே, அந்த தொகையை தனது நண்பருக்கு 6 1/4% வட்டி வீதத்தில், 2 ஆண்டுகளுக்குக் கடனாகக் கொடுத்தார் எனில், 2 ஆண்டுகள் முடிவில் அவர் அடையும் இலாபம்.
(A) ₹ 180
(B) ₹ 210
(C) ₹ 225✓
(D) ₹ 240
45) ஒருவர் ரூ.8000ஐ, 5% வட்டிவீதத்தில், 3 ஆண்டுகளுக்குள் கடனாகப் பெறுகிறார். அன்றே, அந்த தொகையை தனது உறவி னர்க்கு 8% வட்டிவீதத்தில், 3 ஆண்டுகளுக்குக் கடனாகக் கொடுத்தார் எனில், 3 ஆண்டுகள் முடிவில் அவர் அடையும் இலாபம்.
(A) ₹ 600
(B) ₹ 660
(C) ₹ 720.
(D) ₹ 810
46) ஒருவர் ₹2000 ஐ 6% தனிவட்டிக்கு கடன் வாங்குகிறார். ஓர் ஆண்டு முடிவில் ₹1000 ஐ திருப்பி செலுத்துகிறார் எனில் அவர் அக்கடனை இரண்டாம் ஆண்டு முடிவில் முழுவதுமாக முடிக்க எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் (2024 Group 4)
(A) ₹1240
(B) ₹1180✓
(C) ₹1120
(D) ₹1200
47) ஒருவர் 5% தனி வட்டியில் ரூ.200 கடனைப் பெறுகிறார். அவர் 1 வருட இறுதியில் ரூ.100 திருப்பித் தருகிறார். 2 வருட முடிவில் தனது கடனை அடைக்க, அவர் செலுத்த வேண்டிய தொகை
(A) Rs 105
(B) Rs 110
(C) Rs 115✓
(D) Rs 115.50
0 Comments:
கருத்துரையிடுக