Simple Interest Class - 6


59) பின்வரும் வட்டி வீதத்தில் எது ₹ 2000 அசலுக்கு ஓராண்டுக்கு ₹ 200 ஐ தனிவட்டியாகக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்? [7th New Book Back] (20-04-2023 TNPSC)
(A)10%✓
(B)20%
(C)5%
(D)15%

60) ரூ.2000க்கு 2 ஆண்டுக்கு தனி வட்டி ரூ.120 எனில் வட்டி வீதம் எவ்வளவு? (2019 Group 8)
(A) 3℅✓
(B) 2℅
(C) 1℅
(D) 5℅

61) ஒரு வங்கியானது சேமிப்பு தொகையாக வைக்கப்பட்ட ₹3,000க்கு 2 ஆண்டுகளுக்கு ₹240ஐ தனி வட்டியாக வழங்குகிறது எனில் அவ்வங்கி வழங்கும் வட்டி வீதத்தைக் காண்க. (07-05-2023 TNPSC)
(A) 3%
(B) 4%✓
(C) 5%
(D) 6%

62) ₹1,500-க்கு 3 ஆண்டுகளில் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து கிடைத்த தனிவட்டிகளின் வித்தியாசம் ₹13.50 எனில் வட்டி வீதங்களின் வித்தியாசம் (2022 Group 4)
(A) 0.1%
(B) 0.2%
(C) 0.3%✓
(D) 0.4%

63) ரூபாய் 500க்கு 2 ஆண்டுகளில் இரண்டு வங்கிகளின் தனிவட்டிக்கான வித்தியாசம் ரூ. 2.50 எனில் அவ்வங்கிகளின் வட்டி வீதங்ளுக்கு இடையேயான வித்தியாசம் எவ்வளவு? (2019 TNPSC)
(A) 1%
(B) 0.5%
(C) 2.5%
(D) 0.25%✓

64) ரூ. 4,000 ஆனது 4 ஆண்டுகளில் ரூ. 5,000 ஆகிறது எனில் கணக்கிடப்பட்ட தனிவட்டி விகிதம் யாது? (2013 VAO)
(A) 6 1/4%✓
(B) 6 %
(C) 5 1/2%
(D) 6 2/4%

65) பாட்ஷா என்பவர் ஒரு வங்கியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ₹ 8,500 ஐக் கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் ₹ 11,050 ஐச் செலுத்திக் கடனை அடைத்தார் எனில் வட்டி வீதம் எவ்வளவு? (7th New Book)
(A) 10%✓
(B) 20%
(C) 5%
(D) 15%

66) தனிவட்டியின் கீழ் 60 ஆண்டுகளில் 1 ரூபாய், 9 ரூபாய் ஆக மாறுகிறது எனில், ஆண்டு வட்டி வீதம் % யாது? (06-11-2021 TNPSC)
(A) 15%
(B) 13 1/3%✓
(C) 12%
(D) 18%

67) கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 46,900 க்கு 2 ஆண்டுகளுக்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 53,466 எனில், வட்டி வீதத்தைக் காண்க (7th New Book) (10-03-2023 TNPSC)
(A) 5%
(B) 6%
(C) 7%✓
(D) 8%


0 Comments:

கருத்துரையிடுக

-->