f

1. தமக்கான பொது சேவகர் ஒருவரை மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் முறை - தேர்தல்
2. இந்திய தேர்தல் முறை, எந்த நாட்டின் தேர்தல் முறையினைப் பின்பற்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது - இங்கிலாந்து
3. உலகின் மிகப்பெரிய மக்களாட்சி கொண்ட நாடு – இந்தியா
4. இந்தியா ஒரு சமத்துவ, மதச்சார்பற்ற, மக்களாட்சி, குடியரசு நாடு
5. இந்திய அரசியலமைப்பின் தேர்தல் பற்றி குறிப்பிடுவது : பகுதி XV , பிரிவு - 324 முதல் 329 வரை
6. தன்னிச்சையான தேர்தல் ஆணையம் அமைத்திட இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு - பிரிவு 324
7. யாருடைய காலத்தில் குடவோலை வாக்களிக்கும் முறை வழக்கத்தில் இருந்தது – சோழர்கள்
8. தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படும் நாள் - ஜனவரி 25
9. தேசிய அளவில் அரசாங்கத்தின் தலைவர் – பிரதமர்
10. இந்திய தேர்தல் ஆணையம் : ஒரு தலைமை தேர்தல் ஆணையர் , 2 தேர்தல் ஆணையர்கள்
11. பாராளுமன்ற தேர்தல் சம்மந்தமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல், தொகுதிகளை வரையறை செய்தல் போன்ற சட்டங்களை இயற்றுவது - நாடாளுமன்றம்
12. மாநில சட்டசபைத் தேர்தல் சம்மந்தமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல், தொகுதிகளை வரையறை செய்தல் போன்றவற்றை அரசியலமைப்பிற்குட்பட்டு தேவையான சட்டங்களை இயற்றுவது - மாநில சட்ட சபை
13. நோட்டா - எவரும் இல்லை (NOTA = None Of The Above)
14. பொதுத் தேர்தலில் முதல் முறையாக NOTA அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 2014
15. NOTA வை அறிமுகப்படுத்திய நாடுகளில் இந்தியா எத்தனையாவது நாடு – 14
16. இந்திய தேர்தல் நடத்தை விதிகள் (1961) -இல் விதி எண் 49-O இம்முறை பற்றி விவரிக்கிறது
17. வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கைச் சோதனை - VVPAT (Voters Verified Paper Audit Trail)
18. ஒருவர் தான் வாக்கு சரியானபடி பதிவாகி உள்ளதா என்று தெரிந்து கொள்ள பொதுத் தேர்தலில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய ஆண்டு - 2014
19. இந்தியாவில் காணப்படும் தேர்தல் முறைகள் - 2 (நேரடி தேர்தல், மறைமுக தேர்தல்)
20. வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளைத் தாங்களே நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவது - நேரடித் தேர்தல்
21. மக்களவை தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) தேர்தல் முறை - நேரடித் தேர்தல்
22. சட்டமன்றத் தேர்தல்களில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் (MLA) தேர்தல் முறை - நேரடித் தேர்தல்
23. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர், தலைவர்கள் தேர்தல் முறை - நேரடித் தேர்தல்
24. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் வாக்களித்துத் தேர்வு செய்யும் முறை - மறைமுகத் தேர்தல்
25. குடியரசுத் தலைவர் தேர்தல் முறை - மறைமுக தேர்தல்
26. இந்திய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் - பாராளுமன்றத்தின் இரு அவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் + அனைத்து மாநிலங்களின் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
(நியமன உறுப்பினர்கள் இதில் இடம் பெறமாட்டார்கள்)
27. கட்சி முறையின் வகைகள் - ஒரு கட்சி முறை, இரு கட்சி முறை, பல கட்சி முறை
28. ஒரே ஒரு ஆளும் கட்சி மட்டும் பங்கு பெறுவது - ஒரு கட்சி முறை
29. ஒரு கட்சி முறை எ.கா: சீனா, கியூபா, முன்னாள் சோவியத் யூனியன்
30. இரு முக்கிய கட்சிகள் மட்டுமே பங்கு பெறுவது - இரு கட்சி முறை
31. இரு கட்சி முறை எ.கா: அமெரிக்கா, இங்கிலாந்து
32. பல கட்சி முறை எ.கா: இந்தியா, இலங்கை, பிரான்ஸ், இத்தாலி
33. இந்தியாவில் அரசியல் கட்சியின் வகைகள் - தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள்
34. ஒரு கட்சி குறைந்தது நான்கு மாநிலங்களில் மாநிலக் கட்சித் தகுதி பெற்றிருந்தால் அது - தேசியக் கட்சி
35. தேசியக் கட்சிகளுக்கும், மாநிலக் கட்சிகளுக்கும் சிறப்புச் சலுகைகள் + தனித்தனி சின்னங்கள்
36. ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மட்டுமே அக்கட்சியின் சின்னத்தை உபயோகிக்க முடியும்
37. 2017 நிலவரப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசியக் கட்சிகளின் எண்ணிக்கை - 7
38. ஒரு கட்சி தேசியக் கட்சி எனத் தகுதி பெற மூன்று வழிகள் உள்ளன: - 4 மாநிலங்களில் 6% வாக்குகள் - மக்களவையில் 2% இடங்கள் + 3 மாநிலங்கள் - 4 மாநிலங்களில் மாநிலக் கட்சி அங்கீகாரம்
39. அரசாங்கத்தினை அமைத்து, அவற்றை வழிநடத்துவது - அரசியல் கட்சிகள்
40. அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாகச் செயல்படுவது - அரசியல் கட்சி
41. எதிர்க்கட்சித் தலைவர் - கேபினட் அமைச்சர் தகுதி பெறுகிறார்
42. பொது நடவடிக்கைகளை பாதிக்கும் ஆளும் கட்சியின் தவறான கொள்கைகளை எதிர்ப்பவர் - எதிர்க்கட்சித் தலைவர்
43. பொதுக்கணக்குக் குழுவின் தலைவராக அரசு செலவுகளை ஆய்வு செய்பவர் - எதிர்க்கட்சித் தலைவர்
44. மத்தியக் கண்காணிப்பு ஆணையத் தலைவர் தேர்வில் பங்கு வகிப்பவர் - எதிர்க்கட்சித் தலைவர்
45. அழுத்தக் குழுக்கள் - நலக்குழுக்கள் / தனிப்பட்ட நலக்குழுக்கள்
46. அழுத்தக் குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதில்லை; அரசியல் அதிகாரம் பிடிக்காது
47. அரசியலின் மற்றொரு முகம் - அழுத்தக் குழுக்கள்
48. உலகில் அதிக அழுத்தக் குழுக்கள் உள்ள நாடு – இந்தியா
49. இந்திய தேர்தல் முறை எதனை பின்பற்றியது - இங்கிலாந்து
50. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு - சுதந்திரமான அமைப்பு
51. இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழி செய்யும் பிரிவு - பிரிவு 325
52. தேர்தல் ஆணையம் பற்றிக் கூறும் பகுதி - பகுதி XV
53. தேசியக் கட்சி/மாநிலக் கட்சியாக அங்கீகரிப்பது - தேர்தல் ஆணையம்
54. நோட்டா அறிமுகமான ஆண்டு - 2014
55. அழுத்தக் குழுக்கள் என்ற சொல்லை உருவாக்கிய நாடு - அமெரிக்கா
56. தேசிய வாக்காளர் தினம் - ஜனவரி 25
57. இந்தியாவில் கட்சி முறை - பல கட்சி முறை
58. நர்மதா பச்சாவோ அந்தோலன் - அழுத்தக் குழு
59. பொருத்துக: 1. தேசியக் கட்சி - 7
2. ஒரு கட்சி ஆட்சி முறை - சீனா
3. இரு கட்சி ஆட்சி முறை - அமெரிக்கா
4. அழுத்தக் குழுக்கள் - வணிகக் குழுக்கள்
60. இந்தியாவில் அழுத்தக் குழுக்களுக்கான எ.கா: FICCI, AITUC, AIKS, IMA, AISF, YBA, தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், நர்மதா பச்சாவோ அந்தோலன்

0 Comments:

கருத்துரையிடுக

-->