1. மாலாவிடம் 10 செ.மீ., 11 செ.மீ., 12 செ.மீ..... 24 செ.மீ என்ற பக்க அளவுள்ள 15 சதுர வடிவ வண்ணக் காகிதங்கள் உள்ளன. இந்த வண்ணக் காகிதங்களைக் கொண்டு எவ்வளவு பரப்பை அடைத்து அலங்கரிக்க முடியும்?
(A) 4615 செ.மீ²
(B) 4625 செ.மீ²
(C) 4635 செ.மீ'²
(D) 4600 செ.மீ²
2. இரண்டு தொடர் தள்ளுபடிகளான 20% மற்றும் 25% ஆகியவற்றிற்கு நிகரான ஒரே தள்ளுபடி சதவீதம்
(A) 40%
(B) 45%
(C) 5%
(D) 22.5%
4. ஒரு கலையரங்கத்தில் முதல் வரிசையில் 20 இருக்கைகளும் மொத்தம் 30 வரிசைகளும் உள்ளன. அடுத்தடுத்த ஒவ்வொரு வரிசையிலும் அதற்கு முந்தைய வரிசையை விட இரண்டு இருக்கைகள் கூடுதலாக உள்ளன எனில் கடைசி வரிசையில் எத்தனை இருக்கைகள் உள்ளன?
(A) 600
(B) 60
(C) 78
(D) 18
5. 9, 3, 1, ......... என்ற பெருக்குத் தொடர் வரிசையின் 8வது உறுப்பைக் காண்க.
(A) 1/27
(B) 1/81
(C) 1/243
(D) 1/729
6. A என்பது +, B என்பது -, C என்பது X மற்றும் D என்பது + எனில் 2C15B7A100D10 ன் மதிப்பு என்ன?
(A) 24
(B) 26
(C) 33
(D) 36
7. EXAMINATION என்ற வார்த்தை FYBNJOBUJPO என்ற குறியீட்டால் குறிக்கப்பட்டால் CERTIFICATE என்ற வார்த்தை எவ்வாறு குறிப்பிடப்படும்?
(A) DFSUJHJDBUF
(B) DFSUJGIDBUF
(C) DFSJUGJDBUF
(D) DFSUJGJDBUF
8. ஒரு சீரான பகடையை உருட்டும்போது ஓர் இரட்டை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு?
(A) 1/2
(B) 1/3
(C) 5/6
(D) 2/3
9. நாளைய மழை பொழிவிற்கான, நிகழ்தகவு 0.91 எனில் மழை பொழியாமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
(A) 0.09
(B) 1.09
(C) 0.90
(D) 1.90
10. A என்பவர் ஒரு வேலையை 30 நாட்களில் செய்து முடிப்பார். B என்பவர் அதே வேலையை 40 நாட்களில் செய்து முடிப்பார் எனில் Aயும் Bயும் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பா?
(A) 18
(B) 17 1/7
(C) 20
(D) 16 1/6
11. A ஆனவர் B ஐக் காட்டிலும் 3 மடங்கு வேகமாக ஒரு வேலையை செய்து முடிப்பார். அவரால் அந்தப் பணியை B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க.
(A) 8 நாட்கள்
(B) 9 நாட்கள்
(C) 16 நாட்கள்
(D) 7 நாட்கள்
12. ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இரு மடங்காகவும் மாறினால் கன அளவு எத்தனை மடங்காக மாறும் ?
(A) 6 மடங்கு
(B) 18 மடங்கு
(C) 12 மடங்கு
(D) மாற்றமில்லை
13. ஒரு விட்டமும், உயரமும், உடைய உருளை, கூம்பு, கோளம் ஆகியவற்றின் கன அளவுகளின் விகிதம்
(A) 1:2:3
(B) 2:1:3
(C) 1:3:2
(D) 3:1:2
14. P = ₹.5,000, ஆண்டு வட்டிவீதம் r = 4%, n = 2 ஆண்டுகள் எனில், தனிவட்டிக்கும். கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்க.
(A) ₹.8
(B) ₹.16
(C) ₹.24
(D) ₹.32
15. ஓர் இயந்திரத்தின் விலை ரூ.18,000. அது ஆண்டுக்கு 16 2/3% வீதம் தேய்மானம் அடைகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் மதிப்பு ________ ஆக இருக்கும்.
(A) ரூ.12,000
(B) ரூ.12,500
(C) ரூ.15,000
(D) ரூ.16,500
16. ஒரு தொகையானது 3 ஆண்டுகளில் 12% தனிவட்டி வீதத்தில் தொகை ₹. 17,000 ஆகக் கிடைக்கிறது எனில் அந்தத் தொகையைக் காண்க.
(A) ₹. 6,120
(B) ₹. 12,500
(C) ₹. 4,500
(D) ₹. 10,620
17. ஒரு தண்ணீர்த் தொட்டியின் கொள்ளளவு 50லி ஆகும். தற்போது 30% தண்ணீர் நிரம்பியுள்ளது எனில் அதில் 50% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை?
(A) 15 லி
(B) 40 லி
(C) 10 லி
(D) 25 லி
19. y ஆனது x+3க்கு நோவிகிதத்தில் அமைகிறது. மேலும் x=1 எனில், y=8, x=3 எனில், y-ன் மதிப்பு என்ன?
(A) 3
(B) 5
(C) 10
(D) 12
20. (k⁴-1), (x²- 2x+1) ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.சி.ம. காண்க.
(A) (x²+1) (x+1)² (x-1)
(B) (x²-1) (x-1)² (x+1)
(C) (x²+1)(x-1)² (x+1)
(D) (x²+1) (x²-1)(x − 1)²
21. இரு எண்களின் பெருக்கல் பலன் 2160 மற்றும் அவற்றின் மீ.பொ.வ. 12 எனில் அவற்றின் மீ.பொ.ம. காண்க.
(A) 210
(B) 180
(C) 150
(D) 120
24. ஓர் எண்ணில் 60% இலிருந்து 60ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில் அந்த எண்
(A) 60
(B) 100
(C) 150
(D) 200
25. ஒரு நபரின் வருமானம் 10% அதிகரிக்கப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில். அவரது வருமானம்
(A) 2% குறைகிறது
(B) 1% குறைகிறது
(C) 1% அதிகரிக்கிறது
(D) 2% அதிகரிக்கிறது
Score Board
Attended கேள்விகள் | 0 |
சரியான பதில்கள் | 0 |
தவறான பதில்கள் | 0 |
0 Comments:
கருத்துரையிடுக