1) 20:5 என்ற விகிதத்தைச் எளிய வடிவில் காண்க. விடை = 4:1
2) 500 கி இக்கும் 250 கி இக்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க.விடை = 2:1
3) மாதவியும் அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ₹750 மற்றும் ₹900 இக்கு வாங்கினார்கள். அன்புவும் மாதவியும் வாங்கிய மேசைகளின் விலைகளின் விகிதத்தை எளிய வடிவில் காண்க. விடை = 6:5
4) 40 நிமிடத்திற்கும் 1 மணி நேரத்திற்கும் இடையே உள்ள விகிதத்தைக் காண்க. விடை = 2:3
(i) ₹3 இக்கும் ₹5 இக்கும் உள்ள விகிதம்___________ விடை: 3 : 5
(ii) 3 மீ இக்கும் 200 செமீ இக்கும் உள்ள விகிதம்______________ விடை: 3 : 2
(iii) 5 கி.மீ இக்கும் 400 மீ இக்கும் உள்ள விகிதம்____________ விடை: 9 : 10
(iv) 75 பைசாவுக்கும் ₹2 இக்கும் உள்ள விகிதம்__________ விடை : 3 : 8
6) அகிலன் 1 மணி நேரத்தில் 10 கி.மீ நடக்கிறான். செல்வி 1 மணி நேரத்தில் 6 கி.மீ நடக்கிறாள். எனில், அகிலன் மற்றும் செல்வி நடந்த தொலைவுகளுக்கு இடையே உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க விடை = 5:3
7) ஒரு மிதிவண்டியின் நிறுத்தக் கட்டணம் ₹5. மேலும், ஓர் இருசக்கர மோட்டார் வாகனத்தின் நிறுத்தக் கட்டணம் ₹15. மிதிவண்டி மற்றும் இருசக்கர மோட்டார் வாகன நிறுத்தக் கட்டணங்களுக்கு இடையே உள்ள விகிதத்தைக் காண்க. விடை = 1:3
8) ஒரு வகுப்பில் உள்ள 50 மாணாக்கர்களில் 30 பேர் மாணவர்கள் எனில்,
(i) மாணவர்களின் எண்ணிக்கைக்கும் மாணவிகளின் எண்ணிக்கைக்கும் இடையேயுள்ள விகிதம் காண்க. விடை = 3 : 5
(ii) மாணவிகளின் எண்ணிக்கைக்கும் மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கும் இடையேயுள்ள விகிதம் காண்க. விடை = 2 : 5
(iii) மாணவர்களின் எண்ணிக்கைக்கும் மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கும் இடையேயுள்ள விகிதம் காண்க. விடை = 3 : 5
Book Back
9) ₹1 இக்கும் 20 பைசாவுக்கும் உள்ள விகிதம்_____________.
(அ) 1 : 5
(ஆ) 1 : 2
(இ) 2 : 1
(ஈ) 5 : 1 [விடை: (ஈ) 5 : 1]
10) 1 லி இக்கும் 50 மி.லி இக்கும் உள்ள விகிதம்____________.
(அ) 1 : 5
(ஆ) 1 : 20
(இ) 20 : 1
(ஈ) 5 : 1 [விடை: (இ) 20 : 1]
11) ஒரு சன்னலின் நீள அகலங்கள் முறையே 1 மீ மற்றும் 70 செ.மீ எனில் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம்__________.
(அ) 1 : 7
(ஆ) 7 : 1
(இ) 7 : 10
(ஈ) 10 : 7 [விடை: (ஈ) 10 : 7]
12) முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்களின் எண்ணிக்கைகளுக்கு இடையேயுள்ள விகிதம்
(அ) 4 : 3
(ஆ) 3 : 4
(இ) 3 : 5
(ஈ) 3 : 2 [விடை: (ஆ) 3 : 4]
13) அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்
(அ) 10 : 50
(ஆ) 50 : 10
(இ) 5 : 1
(ஈ) 1 : 5 [விடை: (இ) 5 : 1]
14) குமரனிடம் ₹600 உள்ளது. அதனை விமலாவிற்கும் யாழினிக்கும் 2 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கிறார். இருவரில் யாருக்கு அதிகத் தொகை கிடைக்கும்? எவ்வளவு? விடை= விமலாவிற்கு ₹240 உம் யாழினிக்கும் ₹360 உம் கிடைக்கும். எனவே, விமலாவை விட யாழினிக்கு ₹120 அதிகமாகக் கிடைக்கும்.
15) கீழ்க்காணும் சமான விகிதங்களில் விடுபட்ட எண்களை நிரப்புக.
(i) 3 : 5 = 9 : ___ விடை = 15
(ii) 4 : 5 = ___ : 10 விடை = 8
(iii) 6 : ___ = 1: 2 விடை = 12
16) கீழ்க்காணும் எண்களைக் கொடுக்கப்பட்ட விகிதத்தில் பிரிக்கவும்.
(i) 3 : 2 என்ற விகிதத்தில் 20 ஐப் பிரிக்கவும் விடை = 20 ஐ 12, 8 என்ற முறைகளில் பிரிக்கலாம்.
(ii) 4 : 5 என்ற விகிதத்தில் 27 ஐப் பிரிக்கவும் விடை = 27 ஐ 12,15 என்ற முறைகளில் பிரிக்கலாம்.
(iii) 6 : 14 என்ற விகிதத்தில் 40 ஐப் பிரிக்கவும் விடை = 40 ஐ 12, 28 என்ற முறைகளில் பிரிக்கலாம்.
17) ஓர் குடும்பத்தில் மாதச் செலவுகளில் மளிகைக்கும் காய்கறிகளுக்கும் ஆகும் செலவுகளின் விகிதம் 3 : 2. இவை இரண்டிற்கும் ஒரு மாதத்திற்கு ₹4000, ஒதுக்கப்பட்டால்
(i) மளிகை விடை = ₹. 2400
(ii) காய்கறி ஆகியவற்றிற்காகும் செலவுகளைக் காண்க. விடை = ₹. 1600
18) 63 செமீ நீளமுள்ள ஒரு கோட்டுத் துண்டை 3 : 4 என்ற விகிதத்தில் பிரித்தால் கிடைக்கும் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க. விடை = 63 செமீ ஐ 27 செமீ மற்றும் 36 செமீ என்ற முறைகளில் பிரிக்கலாம்.
Book Back
19) 2 : 3 மற்றும் 4 :_______ ஆகியவை சமான விகிதங்கள் எனில் விடுபட்ட உறுப்பு.
(அ) 6
(ஆ) 2
(இ) 4
(ஈ) 3 [விடை: (அ) 6]
20) 4 : 7 இன் சமான விகிதமானது.
(அ) 1 : 3
(ஆ) 8 : 15
(இ) 14 : 8
(ஈ) 12 : 21 [விடை: (ஈ) 12 : 21]
21) 16/24 இக்கு எது சமான விகிதம் அல்ல?
(அ) 6/9
(ஆ) 12/18
(இ) 10/15
(ஈ) 20/28 [விடை: (ஈ) 20 / 28]
22) ₹1600 ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால்,B இக்குக் கிடைக்கும் தொகை எவ்வளவு?
(அ) ₹480
(ஆ) ₹ 800
(இ) ₹1000
(ஈ) ₹200 [விடை: (இ) ₹1000]
23) பின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும்?
(அ) 3 : 5, 6 : 11
(ஆ) 2 : 3, 9 : 6
(இ) 2 : 5, 10 : 25
(ஈ) 3 : 1, 1 : 3 [விடை : (இ) 2 : 5, 10 : 25]
24) 2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், 'x' = ?
(அ) 50
(ஆ) 4
(இ) 10
(ஈ) 8 [விடை : (ஈ) 8]
25) 7:5 ஆனது x : 25 இக்கு விகித சமம் எனில், ‘x' இன் மதிப்பு காண்க.
(அ) 27
(ஆ) 49
(இ) 35
(ஈ) 14 [விடை : (இ) 35]
26) ஒரு வினாடி வினா போட்டியில் கார்முகிலன் மற்றும் கவிதா வழங்கிய சரியான விடைகளின் எண்ணிக்கையின் விகிதம் 10 : 11. அப்போட்டியில் அவர்கள் மொத்தமாக 84 புள்ளிகள் பெற்றனர் எனில், கவிதா பெற்ற புள்ளிகள் எத்தனை? விடை = 44 புள்ளிகள்
27) அந்தோணி ஒரு வாரத்தின் எல்லா நாள்களிலும் காலையிலும் மாலையிலும் பல் துலக்குகிறார். சபீன் காலையில் மட்டும் பல் துலக்குகிறார். ஒரு வாரத்தில் அவர்கள் பல்துலக்கும் தடவைகளின் எண்ணிக்கைகளின் விகிதம் என்ன? விடை = 2:1
28) உன் பள்ளி நாட்குறிப்பிலிருந்து நடப்புக் கல்வியாண்டின் விடுமுறை நாட்களின் எண்ணிக்கைக்கும் வேலை நாள்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதத்தைக் காண்க. விடை = 29:44
29) ஒரு பள்ளியில் 1500 மாணவர்கள், 50 ஆசிரியர்கள் மற்றும் 5 நிர்வாகிகள் என உள்ளனர். பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்தால், மேற்கண்ட விகிதத்தில் எத்தனை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் இருப்பர் எனக் காண்க. விடை = 6:60:1800
30) அமெரிக்காவின் பிரபலமான தங்க நுழைவு வாயில் பாலம் 6480 அடி நீளமும் 756 அடி உயரமும் கொண்ட கோபுரங்களைக் கொண்டது. ஆரு கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட அதன் மாதிரிப் பாலத்தின் நீளம் 60 அடி எனில் அப்பாலத்தின் உயரத்தின் அளவு அடியில் காண்க. விடை = 7 அடி
0 Comments:
கருத்துரையிடுக