43) குளிர்பானம் தயாரிக்கும்
தொழிற்சாலையில் உள்ள ஓர் இயந்திரம் 600 பாட்டில்களை 5 மணி நேரத்தில் நிரப்புகிறது. எனில் அவ்வியந்திரம், 3 மணி நேரத்தில் நிரப்பும்
பாட்டில்களின் எண்ணிக்கை __________ (7th New Book)
A) 300
B) 320
C) 360✔
D) 400
44) ஒரு டசன் (dozen) வாழைப்பழங்களின் விலை ₹ 20 எனில், 48 வாழைப் பழங்களின் விலை என்ன? (7th New Book)
A) 40
B) 60
C) 70
D) 80✔
45) ஒரு மாயாஜாலக் காட்சியைக்
கண்டுகளிக்க 21 மாணவர்களுக்கு ₹840 நுழைவுக் கட்டணமாகச் செலுத்தப்பட்டது ₹1,680 ஐ நுழைவுக் கட்டணமாகச்
செலுத்தினால் எத்தனை மாணவர்கள் அக்காட்சியைக் காண முடியும்? (7th New Book)
A) 32
B) 42✔
C) 52
D) 41
46) ஒரு உணவு விடுதியின் 3 ஆம் தளத்தில் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 120 ஆட்கள் 8 முறை மின்தூக்கி (இயங்கு ஏணி) யில் விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றனர். மின் தூக்கி, 12 முறை விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றால் எத்தனை ஆட்கள் அங்குச் சென்றிருப்பர்? (7th New Book)
A) 90
B) 100
C) 180✔
D) 280
47) ஒரு அஞ்சற்காரர் 738 கடிதங்களை 6 மணி நேரத்தில் முகவரிப்படி
பிரித்து விடுகிறார் எனில். அவர் 9 மணி நேரத்தில் எத்தனை கடிதங்களைப் பிரிப்பார்? (7th New Book)
A) 1107.✔
B) 2107
C) 1108
D) 1100
48) 72 புத்தகங்களின் எடை 9 கி.கி எனில், அதே அளவுள்ள 40 புத்தகங்களின் எடை என்ன? (7th New Book)
A) 5 கி.கி✔
B) 5.5 கி.கி
C) 6 கி.கி
D) 6.5 கி.கி
49) ஒரு டசன் (dozen) சோப்புகளின் விலை ₹ 396, எனில், 35 சோப்புகளின் விலை என்ன? (7th New Book)
A) ₹ 1150
B) ₹ 1145
C) ₹ 1115
D) ₹ 1155✔
50) தமிழ்ச்செல்வன் ₹ 5000 ஐ மூன்று மாதத்திற்கு ஒரு முறை வங்கிக்கணக்கில் சேமித்து வருகிறார். அவர் ₹1,50,000 ஐ சேமிக்க எத்தனை வருடங்களாகும்? (7th New Book)
A) 24 மாதங்கள்
B) 48 மாதங்கள்
C) 60 மாதங்கள்
D) 90 மாதங்கள்✔
51) ஒரு பள்ளியில் 45 நிமிடங்களைக் கொண்ட 7 பாட வேளைகள் உள்ளன. அப்பள்ளியில்
பாட வேளைகள் 9 ஆக மாறும்போது ஒவ்வொரு பாட வேளையின் கால அளவு எவ்வளவு? (7th New Book)
A) 32 நிமிடங்கள்
B) 35 நிமிடங்கள்✔
C) 28 நிமிடங்கள்
D) 40 நிமிடங்கள்
52) ஒரு நீர்த்தேக்கத் தொட்டியை
நிறைப்பதற்கு 6 குழாய்கள் 1 மணி 30 நிமிடம் எடுத்துக்கொள்கின்றன. ஒரு குழாயை அடைத்துவிட்டால் அதே தொட்டியை
நிறைக்க எடுத்துக் கொள்ளும் காலம் எவ்வளவு? (7th New Book)
A) 1 மணி 28 நிமிடம்
B) 1 மணி 38 நிமிடம்
C) 1 மணி 48 நிமிடம்✔
D) 1 மணி 58 நிமிடம்
53) நீலவேணி தினந்தோறும் மிதிவண்டியில்
பள்ளிக்குச் செல்கிறாள். அவளது சராசரி வேகம் 12 கி.மீ / மணி ஆக இருந்தால், அவள் பள்ளியைச் சென்றடைய 20 நிமிடம் ஆகிறது. அவள் 15 நிமிடத்தில் பள்ளியைச்
சென்றடைந்தால் அவளது அதிகரித்த வேகம் எவ்வளவு? (7th New Book)
A) 12 கி.மீ / மணி
B) 14 கி.மீ / மணி
C) 16 கி.மீ / மணி✔
D) 20 கி.மீ / மணி
0 Comments:
கருத்துரையிடுக