நேர் மற்றும் எதிர் விகிதங்கள் Type - 9B

 

33) ஒரு குழி வெட்ட 10 இயந்திரங்கள் 60 நாள்கள் எடுத்துக் கொள்கின்றன. அனைத்து இயந்திரங்களும் ஒரே வேகத்தில் வேலை செய்கின்றன எனில் 30 இயந்திரங்கள் அதே குழியை வெட்ட எத்தனை நாள்களாகும்?

(A) 14 நாட்கள்

(B) 15 நாட்கள்

(C) 16 நாட்கள்

(D) 20 நாட்கள்

 

 

 

 

34) ஒரு பொம்மை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை 36 இயந்திரங்களைக் கொண்டு 54 நாள்களில் மகிழுந்து பொம்மைகளை உற்பத்தி செய்கிறது. அதே அளவிலான மகிழுந்து பொம்மைகளை 81 நாள்களில் உற்பத்தி செய்ய இயந்திரங்கள் தேவை?

(A) 10

(B) 20

(C) 24✔

(D) 15

 

35) ஒரு விவசாயியிடம் 144 வாத்துகளுக்குத் 28 நாட்களுக்குத் தேவையான உணவு உள்ளது. அவர் 32 வாத்துகளை விற்றுவிட்டார் எனில், அவரிடம் உள்ள உணவு மீதமுள்ள எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும்? (7th New Book)

(A) 36 நாட்கள்

(B) 42 நாட்கள்

(C) 56 நாட்கள்

(D) 28 நாட்கள்

 

36) 6 ஆட்கள் ஒரு வேலையை 50 நாட்களில் முடிப்பார்கள் எனில் 10 ஆட்கள் எத்தனை நாட்களில் அந்த வேலையை முடிப்பார்கள்? (2019 TNPSC)

a. 35

b. 45

c. 30✔

d. 40

 

37) 8 பேர் ஒரு வேலையை 24 நாட்களில் முடித்தால் அதை அதே வேலையை 24 பேர் ______ நாட்களில் முடிப்பார் ? (2019 TNPSC)

a. 8✔

b. 16

c. 12

d. 24

 

 

 

 

38) ஒரு பெட்டி தக்காளியின் விலை ரூ. 200. வேந்தன் அவரிடம் உள்ள பணத்தில் 13 பெட்டிகளை வாங்கினார். ஒரு பெட்டியின் விலை ரூ. 260 என அதிகரித்தால் அவரிடம் உள்ள பணத்தை வைத்து எத்தனை பெட்டிகள் வாங்க முடியும்? (2022 TNTET Paper - 1) (7th New Book)

(A) 10✔

(B) 20

(C) 30

(D) 15

 

39) நாற்பது மாணவர்கள் ஒரு விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு 30 நாள்களுக்குத் தேவையான உணவுப் பொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக மாறினால் அவ்வுணவுப் பொருள் அவர்களுக்கு எத்தனை, நாள்களுக்குப் போதுமானதாக இருக்கும்? (7th New Book)

(A) 14 நாட்கள்

(B) 15 நாட்கள்

(C) 16 நாட்கள்

(D) 20 நாட்கள்

 

40) ஒரு தோட்டத்தைக் களையெடுக்க 6 தோட்டக்காரர்களுக்கு 120 நிமிடங்கள் தேவைப்படுகின்றன எனில், அதே வேலையை 30 நிமிடங்களில் செய்து முடிக்கக் கூடுதலாக – எத்தனை தோட்டக்காரர்கள் தேவை? (7th New Book)

a. 24 தோட்டக்காரர்கள்

b. 18 தோட்டக்காரர்கள்

c. 19 தோட்டக்காரர்கள்

d. 20 தோட்டக்காரர்கள்

 

41) 4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாட்கள் எடுத்துக் கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாக சேர்த்தால், அதே வேலையை ______ நாட்களில் செய்து முடிப்பார். (18/09/2021 TNPSC), (22-12-2022 TNPSC), (7th New Book Back)

a. 7

b. 8✔

c. 9

d. 10

 

42) 15 ஆண்கள் ஒரு வேலையை முடிக்க 40 நாட்கள் எடுத்துக் கொள்வர் எனில் அவர்களுடன் மேலும் 15 ஆண்கள் சேர்ந்தால். அதே வேலையானது முடிய எத்தனை நாள்கள் ஆகும்? (19-03-2022 TNPSC)

(A) 30 நாட்கள்

(B) 40 நாட்கள்

(C) 25 நாட்கள்

(D) 20 நாட்கள்

0 Comments:

கருத்துரையிடுக

-->