காலம் மற்றும் வேலை [Time & Work] 2021

TNPSC GROUP 1, 2/2A & 4 (VAO) Minnal Vega Knaitham

1.  A ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். அதே வேலையை B, 20 நாட்களில் முடிப்பார். A மற்றும் B சேர்ந்து 3 நாட்கள் வேலை செய்தபின் A சென்று விட்டார். மீதி வேலையை B முடிக்க தேவைப்படும் நாட்கள் (04/03/2020)
a. 9 நாட்கள்
b. 11 நாட்கள்
c. 12 நாட்கள்
d. 13 நாட்கள்
2.  ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்கள் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடத்தில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விட்டால் அத்தொட்டி நிரம்ப தேவைப்படும் நேரம் (04/03/2020)
a. 45 நிமிடங்கள்
b. 50 நிமிடங்கள்
c. 60 நிமிடங்கள்
d. 70 நிமிடங்கள்
3.  9 சிலந்திகள் 9 வலையை 9 நாட்களில் பின்னுகிறது எனில் 1 சிலந்தி 1 வலையை எத்தனை நாளில் பின்னும்? (23/02/2020)
a. 1 நாள்
b. 9 நாட்கள்
c. 18 நாட்கள்
d. 12 நாட்கள்
4.  A மற்றும் B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C அதே வேலையை 15 நாட்களில் முடிப்பர். C மற்றும் A அதே வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் A, B மற்றும் C மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க தேவைப்படும் நாட்கள். (23/02/2020)
a. 10 நாட்கள்
b. 12 நாட்கள்
c. 14 நாட்கள்
d. 15 நாட்கள்
5.  7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்? (11/01/2020)
a. 25 நாட்கள்
b. 28 நாட்கள்
c. 20 நாட்கள்
d. 45 நாட்கள்
6.  5 நபர்கள் 5 வேலையை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில், 50 நபர்கள் 50 வேலைகளை _______ நாட்களில் செய்து முடிப்பர். (2021 G1)
a. 5 நாட்கள்
b. 10 நாட்கள்
c. 50 நாட்கள்
d. 55 நாட்கள்
7.  210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 18 நாட்களில் முடிப்பர். அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து 20 நாட்களில் முடிக்க எத்தனை ஆண்கள் தேவை? (2021 G1)
a. 156 ஆண்கள்
b. 162 ஆண்கள்
c. 168 ஆண்கள்
d. 172 ஆண்கள்
8.  A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (2021 G1)
a. 18 நாட்கள்
b. 24 நாட்கள்
c. 28 நாட்கள்
d. 30 நாட்கள்
9.  4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாட்கள் எடுத்துக் கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாக சேர்த்தால், அதே வேலையை ______ நாட்களில் செய்து முடிப்பார். (18/09/2021)
a. 7
b. 8
c. 9
d. 10
10.  5 நபர்கள் 5 வேலைகளை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில் 50 நபர்கள் 50 வேலைகளை _____ நாட்களில் செய்து முடிப்பர் (18/09/2021)
a. 5
b. 25
c. 50
d. 55
11.  ஒரு வேலையை A, 8 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையை முடிக்க Bக்கு 12 நாட்கள் ஆகும். அந்த வேலை A மற்றும் B இருவரும் சேர்ந்து முடித்து ரூ. 200ஐ ஒருங்கிணைத்து ஊதியமாக பெற்றால் அதில் Bன் ஊதியம் (18/04/2021)
a. 75
b. 80
c. 85
d. 90
12.  A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும் B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் செய்து வேலையை செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும் (18/04/2021)
a. 15
b. 12
c. 20
d. 25
13.  180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்? (17/04/2021)
a. 13
b. 14
c. 15
d. 16
14.  6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து, 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர்? (13/01/2021)
a. 20 நாட்கள்
b. 40 நாட்கள்
c. 10 நாட்கள்
d. 60 நாட்கள்
15.  A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பார். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (07/11/2021)
a. 6 நாட்கள்
b. 12 நாட்கள்
c. 18 நாட்கள்
d. 24 நாட்கள்
16.  A ஒரு வேலையை 10 நாட்களிலும், B அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பார். இருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்து ரூ. 1,500 ஈட்டினால், அத்தொகையை எவ்வாறு பிடித்துக் கொள்வார்? (07/11/2021)
a. ரூ.600, ரூ900
b. ரூ.700, ரூ800
c. ரூ.900, ரூ700
d. ரூ.900, ரூ600
17.  P மற்றும் Q ஆகியோர் ஒரு வேலையின் முறையே 20 மற்றும் 30 நாட்களில் முடிப்பார். அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வேலையை தொடங்கினர். சில நாட்கள் வேலை செய்தபின் Q ஆனவர் 5 நாட்களுக்கு பின் சென்று விடுகிறார் மீதமுள்ள வேலையை P ஆனவர் 5 நாட்களில் முடிக்கிறார் எனில் தொடக்கத்திலிருந்து எத்தனை நாட்களுக்கு பின் Q வேலையை விட்டு சென்றார்? (07/11/2021)
a. 6 நாட்கள்
b. 8 நாட்கள்
c. 9 நாட்கள்
d. 10 நாட்கள்
18.  A என்பவர் ஒரு வேலையை 12 மணி நேரத்தில் முடிப்பார். B மற்றும் C அந்த வேலையை 3 மணி நேரத்திலும் A மற்றும் C அந்த வேலையை 6 மணி நேரத்திலும் செய்து முடிப்பார். அதே வேலையை B தனியே எவ்வளவு மணி நேரத்தில் முடிப்பார்? (21/11/2021)
a. 4 மணி
b. 5 மணி
c. 3 மணி
d. 6 மணி
19.  ஒரு வேலைக்காரராக A என்பவர் B என்பவரைவிட மும்மடங்கு கெட்டிக்காரர் மற்றும் A என்பவர் ஒரு வேலையை முடிக்க B-ஐ விட 10 நாட்கள் குறைவாக எடுத்துக் கொள்கிறார் எனில் B மட்டும் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (21/11/2021)
a. 12 நாட்கள்
b. 15 நாட்கள்
c. 20 நாட்கள்
d. 30 நாட்கள்
20.  8 ஆட்கள் ஒரு வேலையை 20 நாட்களில் செய்கிறார். 5 நாட்கள் கழித்து 4 ஆட்கள் கூடுதலாக வேலை செய்கின்றனர் எனில் மீதமுள்ள வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? (21/11/2021)
a. 15 நாட்கள்
b. 12 நாட்கள்
c. 10 நாட்கள்
d. 8 நாட்கள்

Score Board

Attended கேள்விகள் 0
சரியான பதில்கள் 0
தவறான பதில்கள் 0

0 Comments:

கருத்துரையிடுக

-->