காலம் மற்றும் வேலை [Time & Work] 2021

TNPSC GROUP 1, 2/2A & 4 (VAO) Minnal Vega Knaitham

1.  A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாள்களிலும் B ஆனவர் தனியே 15 நாள்களிலும் முடிப்பர். அவர்கள் இந்த வேலையை ₹ 2,00,000 தொகைக்கு ஒப்புக் கொண்டனர் எனில் A பெறும் தொகை ______ ஆகும். [22-01-2022]
(A) ₹ 1,20,000
(B) ₹ 90,000
(C) ₹ 60,000
(D) ₹ 40,000
2.  A மற்றும் B ஒரு வேலையை 12 நாட்களில் செய்ய முடியும். B மற்றும் C 15 நாட்களிலும், C மற்றும் A 20 நாட்களிலும் செய்யமுடியுமென்றால் அவர்கள் எத்தனை நாட்களில் அதை ஒன்றாகச் செய்து முடிப்பார்கள். [22-01-2022]
(A) 47 நாட்கள்
(B) 10 நாட்கள்
(C) 23 நாட்கள்
(D) 360 நாட்கள்
3.  நிரப்புக:
5 நபர்கள் 5 வேலைகள் 5 நாட்களில் செய்து முடிப்பார் எனில், 50 நபர்கள் 50 வேலைகளை ________ நாட்களில் செய்து முடிப்பார். [11-01-2022]
a. 5
b. 6
c. 50
d. 10
4.  210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 18 நாட்களில் முடிப்பர். அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து 20 நாட்களில் முடிக்க எத்தனை ஆண்கள் தேவை? [11-01-2022]
a. 160
b. 162
c. 164
d. 169
5.  A என்பவர் ஒரு வேலையை 12 மணி நேரத்தில் முடிப்பார். B மற்றும் C அந்த வேலையை 3 மணி நேரத்திலும் A மற்றும் C அந்த வேலையை 6 மணி நேரத்திலும் செய்து முடிப்பார். அதே வேலையை B தனியே எவ்வளவு மணி நேரத்தில் முடிப்பார்? [08-01-2022]
a. 2 மணிகள்
b. 5 மணிகள்
c. 7 மணிகள்
d. 4 மணிகள்
6.  A ஆனவர் B என்பவரை காட்டிலும் வேலை செய்வதில், 3 மடங்கு வேகமானவர். அவரால் அந்த வேலையை, B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாள்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தை காண்க. [08-01-2022]
a. 4 நாள்கள்
b. 6 நாள்கள்
c. 9 நாள்கள்
d. 7 நாள்கள்
7.  12 மாடுகள் ஒரு வயலை 10 நாட்களில் மேய்கின்றது எனில் 20 மாடுகள் அதே வயலை எத்தனை நாட்களில் மேயும்? [08-01-2022]
a. 15
b. 18
c. 6
d. 8

Score Board

Attended கேள்விகள் 0
சரியான பதில்கள் 0
தவறான பதில்கள் 0

0 Comments:

கருத்துரையிடுக

-->