2021 TNPSC Exams Percentage (சதவீதம்)

1.  ஒரு தேர்வில் 480 மாணவர்களில் 85% பெண்கள் மற்றும் 70% ஆண்கள் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 75% எனில் தேர்வில் எத்தனை ஆண்கள் பங்கு பெற்றனர்? (13/01/2021 TNPSC)
a. 370
b. 360
c. 340
d. 320
2.  ஒரு பள்ளியில் 560 மாணவர்கள் உள்ளனர் அதில் 320 பேர் சிறுவர்கள் எனில் அந்தப் பள்ளியில் உள்ள சிறுமிகளின் சதவீதத்தை காண்க. (13/01/2021 TNPSC)
a. 42.56%
b. 42.66%
c. 42.76%
d. 42.86%
3.  செந்தில் என்பவர் ஒரு மகிழுந்தை ரூ. 4,26,000 க்கு வாங்கி, மேலும் போக்குவரத்து மற்றும் காப்பீட்டு தொகைக்காக முறையே ரூ. 9,000 மற்றும் ரூ. 15,000 செலுத்தி, அதன் பின் அம்மகிழுந்தை ரூ. 4,41,000 க்கு விற்பனை செய்கிறார் எனில் அவர் அடைந்தது இலாபமா? நட்டமா? எத்தனை சதவீதம்? (13/01/2021 TNPSC)
a. இலாபம் 5%
b. நட்டம் 5%
c. இலாபம் 2%
d. நட்டம் 2%
4.  மிதிவண்டி ஒன்று ஒரு கடைக்காரர் ரூ.4225 க்கு விற்பதால் அவருக்கு 5% நட்டம் ஏற்படுகிறது எனில் 5% லாபம் பெற வேண்டுமெனில் அவர் மிதிவண்டியை என்ன விலைக்கு விற்க வேண்டும்? (17/04/2021 TNPSC)
a. 4625
b. 4725
c. 4825
d. 4925
5.  ஒரு எண்ணை 20% குறைத்தால் 80 கிடைக்கிறது எனில் அந்த எண்ணை காண்க? (17/04/2021 TNPSC)
a. 40
b. 60
c. 100
d. 120
6.  ஒரு பள்ளியில் 560 மாணவர்கள் உள்ளனர். அதில் 320 பேர் சிறுவர்கள் எனில், அந்தப் பள்ளியில் உள்ள சிறுமிகளின் சதவிகிதத்தை காண்க. (18/09/2021 TNPSC)
a. 42.86%
b. 40.26%
c. 42.68%
d. 40.32%
7.  ஒரு பொருளின் விலையானது 20% அதிகரித்து பின் 20% குறைகிறது. முதல் விலையை ஒப்பிடும் பொழுது கடைசி விலையானது? (18/09/2021 TNPSC)
a. 20% குறைவு
b. 20% அதிகம்
c. 4% அதிகம்
d. 4% குறைவு
8.  ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ. 500 பரிசு வழங்குவதற்காக ஆண்டுக்கு 10% என்ற முறையில் முதலீடு செய்ய ஒரு நிதியை உருவாக்க முடிவு செய்கிறார் எனில் ஆரம்ப முதலீடு காண்க. (18/09/2021 TNPSC)
a. ரூ. 4,000
b. ரூ. 5,000
c. ரூ. 6,000
d. ரூ. 5,500
9.  ஒரு நாளில் 3 மணி நேரத்திற்கான சதவிகிதம் எவ்வளவு? (07/11/2021 TNPSC)
a. 12 1/2%
b. 16 2/3%
c. 18 2/3%
d. 22 1/2%
10.  P இன் வருமானம் Q ஐக் காட்டிலும் 25% அதிகம் எனில், Q இன் வருமானம் P ஐக் காட்டிலும் எத்தனை சதவிகிதம் குறைவு? (20/11/2021 TNPSC)
a. 25%
b. 10%
c. 20%
d. 12%
11.  இரண்டு எண்கள் மூன்றாம் எண்ணைவிட முறையே 10% மற்றும் 25% அதிகம் எனில் முதல் எண்ணானது இரண்டாம் எண்ணின் ______ சதவிகிதம் ஆகும் (20/11/2021 TNPSC)
a. 65%
b. 75%
c. 80%
d. 88%
12.  ஒரு கடைக்காரர் ஒரு பொருளின் அடக்க விலையில் 15 சதவீதம் அதிகமாக்கி அதன் குறித்த விலை ஆக்குகிறார். அதில் 15 சதவீதம் தள்ளுபடி தந்து விற்பனை செய்கிறார் எனில் கடைக்காரர் அடைந்தது. (2021 Group 1)
(A) லாபம்
(B) நட்டம்
(C) லாபமும் இல்லை நட்டமும் இல்லை
(D) லாபமாகவும் இருக்கும் நட்டமாகவும் இருக்கும்

Score Board

Attended கேள்விகள் 0
சரியான பதில்கள் 0
தவறான பதில்கள் 0

0 Comments:

கருத்துரையிடுக

-->