210) ஒரு தண்ணீர்த் தொட்டியின் கொள்ளளவு 50 லிட்டர்கள் ஆகும். தற்போது அதில் 30% தண்ணீர் நிரம்பியுள்ளது. எனில், அதில் 50% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை? (8th New Book) (23-07-2023 TNPSC)
a. 5 லிட்டர்
b. 10 லிட்டர்✔
c. 15 லிட்டர்
d. 25 லிட்டர்
211) முட்டைகள் நிரம்பிய ஒரு கூடையிலிருந்த 20 சதவீத முட்டைகள் உடைந்துவிட்டது. 25 சதவீத முட்டைகள் விருந்தினர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டது. மீதமிருந்து 22 முட்டைகள் குடும்ப உறுப்பினர்களால் உண்ணப்பட்டது எனில் கூடையிலிருந்த மொத்த முட்டைகளின் எண்ணிக்கை யாது? (07-02-2024 TNPSC)
அ) 23
ஆ) 40✔
இ) 55
ஈ) 67
212) ஒரு தலைமையைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் A மற்றும் B ஆகிய இரு நபர்களில் A ஆனவர் 192 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். மொத்த வாக்குகளில் A ஆனவர் 58% ஐப் பெறுகிறார் எனில், பதிவான மொத்த வாக்குகள் எவ்வளவு? [08-10-2022]
(A) 1000 வாக்குகள்
(B) 1050 வாக்குகள்
(C) 1100 வாக்குகள்
(D) 1200 வாக்குகள்✔
213) கோபி ஒரு மடிக்கணினியை 12% இலாபத்திற்கு விற்றார். மேலும் அதை ₹1200க்கு கூடுதலாக விற்றிருந்தால் இலாபம் 20% ஆக இருந்திருக்கும். மடிக்கணினியின் அடக்க விலையைக் காண்க? (14-09-2024 TNPSC)
அ) ₹15000✔
ஆ) ₹16000
இ) ₹14000
ஈ) ₹15500
214) ஒரு மாணவர் 31% மதிப்பெண்களைப் பெற்று 12 மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெற 35% மதிப்பெண்கள் தேவை எனில் தேர்வின் மொத்த மதிப்பெண்களை காண்க? (09-11-2024 TNPSC)
அ) 100
ஆ) 150
இ) 200
ஈ) 300✔
215) பீட்டர் என்பவர் ஒரு தேர்வில் 280 மதிப்பெண்களைப் பெற்றுத் தோல்வி அடைந்தார். அவர் இன்னும் 20 மதிப்பெண்கள் பெற்றிருந்தால், மொத்த மதிப்பெண்களில் 50% பெற்று வெற்றி பெற்றிருப்பார் எனில், மொத்த மதிப்பெண்களைக் காண்க? (7th New Book)
a. 400
b. 500
c. 600✔
d. 700
216) கயல் என்பவர் முதல் திருப்புதல் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 225 மதிப்பெண்களும் இரண்டாம் திருப்புதல் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 260 மதிப்பெண்களும் பெற்றார் எனில், அவரது மதிப்பெண்கள் அதிகரிப்பின் சதவீதத்தைக் காண்க?
a. 7%✔
b. 8%
c. 9%
d. 10%
0 Comments:
கருத்துரையிடுக