Time and Work Class - 5

39) A என்பவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் மூன்று மடங்கு வேகமானவர். B ஆனவர் ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார் எனில், இருவரும் இணைந்து அந்த வேலையை முடிக்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வர் எனக் காண்க. (8th New Book) (12-03-2022 TNPSC) [19-06-2022 TNPSC] [2022 Group 8]
(A) 5 நாட்கள்
(B) 6 நாட்கள்✔
(C) 8 நாட்கள்
(D) 9 நாட்கள்

40) அமுதா ஒரு சேலையை 18 நாள்களில் நெய்வார், அஞ்சலி, அமுதாவை விட நெய்வதில் இருமடங்கு திறமைசாலி. இருவரும் இணைந்து நெய்தால், அந்தச் சேலையை எத்தனை நாட்களில் நெய்து முடிப்பர்? (8th New book) [2022 Group 8]
(A) 9 நாட்கள்
(B) 6 நாட்கள்✔
(C) 5 நாட்கள்
(D) 4 நாட்கள்

41) A ஆனவர் B என்பவரை காட்டிலும் வேலை செய்வதில், 3 மடங்கு வேகமானவர். அவரால் அந்த வேலையை, B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாள்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தை காண்க? (8th New book) [08-01-2022 TNPSC] [28-05-2022 TNPSC] [24-04-2022 TNPSC] [2022 Group 7], (07-01-2024 TNPSC)
a. 4 நாள்கள்
b. 6 நாள்கள்
c. 9 நாள்கள்✔
d. 7 நாள்கள்

42) ஒரு வேலைக்காரராக A என்பவர் B என்பவரைவிட மும்மடங்கு கெட்டிக்காரர் மற்றும் A என்பவர் ஒரு வேலையை முடிக்க B-ஐ விட 10 நாட்கள் குறைவாக எடுத்துக் கொள்கிறார் எனில் B மட்டும் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (21/11/2021 TNPSC)
a. 12 நாட்கள்
b. 15 நாட்கள்✔
c. 20 நாட்கள்
d. 30 நாட்கள்

43) A என்பவர் B ஐப் போல் இரு மடங்கு வேலை செய்பவர். மேலும் அவர்கள் இருவரும் இணைந்து ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார் எனில் A மட்டும் அவ்வேலையை முடிக்க எத்தனை நாட்களாகும்? [08-10-2022 TNPSC]
(A) 36 நாட்கள்✔
(B) 48 நாட்கள்
(C) 30 நாட்கள்
(D) 32 நாட்கள்

44) A ஆனவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் 5 மடங்கு வேகமானவர். அவரால் அந்த வேலையை B எடுத்துக்கொண்ட நேரத்தை விட 40 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க் ஆகம் நேரத்தைக்காண்க. (19-11-2024 TNPSC)
அ) 8 1/3 நாட்கள்✔
ஆ) 8 1/2 நாட்கள்
இ) 8 1/4 நாட்கள்
ஈ) 8 1/5 நாட்கள்    

0 Comments:

கருத்துரையிடுக

-->