Time and Work Class - 6

45) 6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து, 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர்? (13/01/2021 TNPSC), (2018 Group 2)
a. 20 நாட்கள்✔
b. 40 நாட்கள்
c. 10 நாட்கள்
d. 60 நாட்கள்

46) 48 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 7 மணி நேரம் வேலை செய்து 24 நாட்களில் முடிப்பர் எனில் 28 ஆண்கள் அதே வேலையை நாளொன்றுக்கு 8 மணிநேரம் வேலை செய்து எத்தனை நாட்களில் முடிப்பர்? (30-04-2022 TNPSC), [28-05-2022 TNPSC], (20-04-2023 TNPSC)
(A) 36 நாட்கள்✔
(B) 42 நாட்கள்
(C) 56 நாட்கள்
(D) 28 நாட்கள்

47) 7 பேர் ஒரு வேலையை தினம் 9 மணி நேரம் வேலை செய்து 30 நாட்களில் முடிக்கின்றனர். அதே வேலையை 10 பேர் தினம் 7 மணிநேரம் செய்தால், எத்தனை நாட்களில் முடிப்பர்? (2016 Group 2)
a. 28 நாட்கள்
b. 30 நாட்கள்
c. 32 நாட்கள்
d. 27 நாட்கள்✔

48)  5 நபர்கள் 5 வேலைகள் 5 நாட்களில் செய்து முடிப்பார் எனில், 50 நபர்கள் 50 வேலைகளை ________ நாட்களில் செய்து முடிப்பார் [11-01-2022 TNPSC], [2022 Group 2], (8th New Book)
a. 5✔
b. 6
c. 50
d. 10

49) 24 ஆண்கள் 12 நாள்களில் 48 பொருள்களை செய்வர் எனில், 6 ஆண்கள் _______ பொருள்களை 6 நாள்களில் செய்வர். [8th New Book Box]
a. 3
b. 6✔
c. 12
d. 24

50) ஒரு நிறுவனமானது 20 நாள்களுக்கு 15 வேலையாள்களுக்கு ₹6 இலட்சம் தொகையை ஊதியமாக வழங்குகிறது எனில், அந்நிறுவனத்திற்கு 5 வேலையாள்களுக்கு 12 நாள்களுக்கு ஊதியமாக வழங்க எவ்வளவுத் தொகை தேவை? [8th New Book]
A) ₹ 1.1 இலட்சம்
B) ₹ 1.2 இலட்சம்✔
C) ₹ 1.3 இலட்சம்
D) ₹ 1.5 இலட்சம்

51) 15 வேலையாள்கள் 4 கி.மீ நீளமுள்ள சாலையை 4 மணி நேரத்தில் அமைப்பர் எனில், _______ வேலையாள்கள் 8 கி.மீ நீளமுள்ள சாலையை 8 மணி நேரத்தில் அமைப்பர். [8th New Book Box]
a. 4
b. 8
c. 15✔
d. 20

52) 7 சிலந்திகள் 7 கூடுகளை 7 நாட்களில் செய்தால் 1 சிலந்தி 1 கூட்டினை எத்தனை நாட்களில் செய்யும்? (2014 Group 2)
a. 1
b. 7/2
c. 7✔
d. 49

0 Comments:

கருத்துரையிடுக

-->