322) முற்பகல் 7 மணிக்கு சரியான நேரத்தில் வைக்கப்பட்ட ஒரு கடிகாரமானது மணிக்கு 2 நிமிடங்கள் வீதம் தாமதமாக இயங்கினால் பிற்பகல் 6 மணிக்கு அக்கடிகாரம் காட்டும் நேரத்தை காண்க: (6th New Book), (2023 TNPSC)
(A) 5 மணி 38 நிமிடங்கள்✔
(B) 6 மணி 38 நிமிடங்கள்
(C) 5 மணி 22 நிமிடங்கள்
(D) 6 மணி 22 நிமிடங்கள்
323) முற்பகல் 5 மணிக்கு சரியான நேரத்தில் வைக்கப்பட்ட ஒரு கடிகாரமானது, மணிக்கு 3 நிமிடங்கள் வீதம் வேகமாக இயங்கினால் பிற்பகல் 7 மணிக்கு அக்கடிகாரம் காட்டும் நேரத்தைக் காண்க. (6th New Book)
(A) 7 மணி 42 நிமிடங்கள்✔
(B) 6 மணி 42 நிமிடங்கள்
(C) 7 மணி 18 நிமிடங்கள்
(D) 6 மணி 18 நிமிடங்கள்
324) ஓர் அஞ்சல் அலுவலகம் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 5.45 மணி வரை இயங்குகிறது. மதியம் 1 மணி நேரம் உணவு இடைவேளை ஆகும். அஞ்சல் அலுவலகம் வாரத்தில் 6 நாட்கள் இயங்கினால், ஒரு வாரத்தின் மொத்த வேலை நேரத்தைக் கணக்கிடுக? (6th New Book)
(A) 40 மணி 30 நிமிடங்கள்✔
(B) 40 மணி 50 நிமிடங்கள்
(C) 36 மணி 45 நிமிடங்கள்
(D) 36 மணி 50 நிமிடங்கள்
325) ஒரு கடிகாரம் காலை 7:00 மணிக்கு சரியான நேரத்தில் அமைக்கப்பட்டது. அது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 3 நிமிடங்கள் இழக்கிறது. ஒரு மனிதன் மதியம் 12:00 மணிக்கு அதைச் சரிசெய்கிறான். கடிகாரம் பிற்பகல் 3:35 ஐக் காட்டும்போது உண்மையான நேரம் என்ன?
(A) 3 மணி 46 நிமிடங்கள்
(B) 3 மணி 45 நிமிடங்கள்✔
(C) 3 மணி 47 நிமிடங்கள்
(D) 3 மணி 44 நிமிடங்கள்
326) சீதா(பூங்கோதை) முற்பகல் 5.20 மணிக்குத் துயில் எழுந்து 35 நிமிடங்கள் தன்னைத் தயார் செய்து கொண்டு, 15 நிமிடத்தில் தொடர் வண்டி நிலையத்தை அடைந்தாள். தொடர் வண்டி சரியாக முற்பகல் 6 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது எனில் சீதா(பூங்கோதை) அந்தத் தொடர் வண்டியில் பயணம் செய்திருப்பாரா? (6th New Book)
(A) 6 மணி 10 நிமிடங்கள்
(B) 6 மணி 45 நிமிடங்கள்
(C) 5 மணி 20 நிமிடங்கள்
(D) சீதா அந்த தொடர் வண்டியில் பயணம் செய்யமாட்டாள்✔
327) 22 : 35 மணியில் இருந்து 5 மணி நேரம் கடந்த பிறகு காட்டும் நேரம் ________ (6th New Book Back)
(A) 2 : 30 மணி
(B) 3: 35 மணி
(C) 4 : 35 மணி
(D) 5:35 மணி✔
0 Comments:
கருத்துரையிடுக